உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசின் அடக்கு முறை

103

இந்த அறிவிப்பிற்கு ஏற்றபடியே ‘பகுத்தறிவு’ செயல்பட்டு வந்தது.

தோழர் ப.ஜீவானந்தம், பகுத்தறிவில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் ‘எனது கனவு’ என்று பாடிய பாட்டின், சில வரிகளைப் பாருங்கள்.

ஆண்டான் அடிமையெனும் அவச்சொல் அங்கில்லை
ஆண்பெண் பேதம் பாராட்டும் அழிகிறுக் கங்கில்லை
வேண்டும் சுயேச்சைப் பேச்சில் விதிவிலக்கில்லை

மீறும் சட்டதிட்டங்கள் கூறுவோர் இல்லை’

‘பகுத்தறிவு’ தனது தலையங்கம் ஒன்றில்,

‘இந்திய விடுதலை, சமதர்மவாதிகளால்தான் முடியும்’ என்று எழுதியது.

‘தொழிலாளர் நலம்’ என்னும் தலைப்பில் தி.அ.வேங்கடசாமிப் பாவலர் பாடிய பாட்டைப் பகுத்தறிவு வெளியிட்டது. அதில்,

விளைபொருள் செய்பொருள்கள் யாமே—நெற்றி
வேர்வை நிலம்வீழ உழைப்போமே
உழைப்பில்லார் வீட்டில் அவைபோமே—எங்கள்

உள்பசித்தீ புகுந்து வேமே’

என்ற காட்சி உள்ளத்தில் பதிந்தது.

ஏற்கனவே, ‘குடியரசு புத்தகாலயம்’ என்ற பெயரில்,

(1) பொது உடைமைத் தத்துவ வினா விடைகள்
(2) 1917 புரட்சியின் சுருக்கம்
(3) போல்சுவிசம் அல்லது பொது உடைமை
(4) காரல் மார்க்சின் சரித்திரச் சுருக்கம்

—ஆகிய நூல்களை வெளியிட்டு, அரசின் சினத்திற்கு ஆளான ஈ. வெ. ராமசாமி, ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற தோழர் பகத் சிங் எழுதிய கட்டுரையைத் தமிழில் நூலாக வெளியிட்டார்.

இங்கிலாந்தில் குடியிருந்த சக்லத்வாலா என்ற இந்தியர், சோவியத் நாட்டிற்குச் சென்று வந்தார். அவர், ‘சோவியத் நாட்டில் கண்டதென்ன?’ என்ற தலைப்பில் ஆங்கிலக்