126
பெரியாரும் சமதர்மமும்
உலகப் போர் நடந்து கொண்டிருக்கையிலேயே, 4-8-1940இல் திருவாரூரில் நடந்த நீதிக் கட்சியின் 15ஆவது மாகாண மாநாட்டில், சென்னை மாகாணத்தை ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்யும் அளவிற்கு ஆதரவு இருந்தது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இழிவுக்கு ஆளாகி, வறுமைக்கு ஆட்பட்டுத் தற்குறித் தன்மையில் வீழ்ந்து, புரோகிதனும், மற்றவனும் சுரண்ட, தவித்துக் கொண்டிருந்த பொது மக்கள், சமதர்ம வழியை, விடுதலை வழியாக—வாழ்வளிக்கும் பெருவழியாகக் கருதினார்கள்.
திருவாரூர் மாநாட்டில், திராவிட நாட்டுப் பிரிவினைக்கு வேண்டிய திட்டங்களைத் தயாரிக்க, திட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவில் பெரியாரோடு, தோழர்கள் பி.டி. இராசன், கன்னையா (நாயுடு), பி. இராமச்சந்திர (ரெட்டி) இருவரும் ஆந்திரர்கள், எம்.ஏ.முத்தையா (செட்டியார்), என். ஆர். சாமியப்பா, நாராயணசாமி (நாயுடு), அப்பாதுரை (பிள்ளை), ஏ. துரைசாமி, மகாபல ஹெக்டே (கன்னடியர்) பி. பாலசுப்ரமணியம், சி.பாசுதேவ், கி.ஆ.பெ.விசுவநாதன், ஊ.பு.த.சௌந்தர பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
பிரிவினை எண்ணத்தின் பின்னணி என்ன?
நெடுந்தொலைவில் இருந்து, இந்தியாவிற்கு வந்து, வணிகங்களைத் தொடங்கி, மெல்ல, மெல்ல, ஆட்சியாளர்களாக மாறிய ஆங்கிலேயர்கள், இந்திய அரசுரிமையைக் கைப்பற்றிய போது, இந்திய நாடு முழுவதையும், ஒரே மன்னரிடமிருந்தோ, ஆட்சியிடமிருந்தோ பறித்துக் கொண்டார்களா? இல்லை. பல அரசர்களிடமிருந்து கைப்பற்றினார்கள். ஆங்கிலேயர் வந்த போதோ, அதற்கு முந்திய எக்காலத்திலோ, இந்திய நாடு முழுவதும் ஒரே குடைக் கீழ் ஆளப்படவில்லை.
ஊரில் ஓர் வீடு, அண்ணன் தம்பிகள் நால்வர்; அவர்கள் தனித் தனிக் குடும்பம் நடத்தினர். அவர்களுக்குள் அழுக்காறு, சண்டையாகி, அன்னியர் தலையிடும் நிலையை உருவாக்கிற்று, நால்வர் சொத்துக்களையும், பொதுவான ஒருவர் ஏற்றுப் பராமரிக்கும் நிலை, சில காலம் இருந்தது. அச் சொத்துக்களை திருப்பிக்