138
பெரியாரும் சமதர்மமும்
பெரியார் இயக்கத்தைப் பொறுத்த மட்டில், போரில், ஆங்கிலேயருக்கு ஆதரவு கொடுத்தது, எவ்விதப் பேரத்தின் அடிப்படையிலும் அல்ல; தனிப்பட்டவர்களின் நன்மைக்காகவும் அல்ல.
இட்லர் கட்டவிழ்த்து விட்ட நாசிச, இனவெறிப் போக்கு,. மாந்தர் இனம் முழுவதையும் அடிமையில் ஆழ்த்தி விடும்; எனவே, அப்பெருங் கேட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், இட்லருக்கு எதிரான நேசக்கட்சிக்கு உதவி வந்தது.
சர். ஸ்டாபோர்ட் கிரிப்சின், அலட்சியப் போக்கையும் பொருட்படுத்தாத பின்னரும், ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து, பெரியாரைப் பின்பற்றியவர்கள், ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் பணியாற்றினார்கள்.
நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு மேல், தற்குறிகளாகக் கிடந்த நம் சமுதாயத்தில், உண்மைக்குத் திரையிடப்படுவது எளிது; வாயாடிக்காரர்கள், நினைத்த பொய்களைப் பரப்புவது மிக எளிது.
‘பெரியார் இயக்கத்தவர், ஆங்கிலேயருக்கு வால் பிடிப்பவர்கள்’ என்று ஒரு பக்கம் உளமாரப் பொய்யைப் பரப்பி வந்தார்கள். அவர்களில் பலர், “ஆங்கில ஆட்சி பெரியாரைப் பொருட்படுத்தவில்லை” என்று மதிப்புக் குறைவாகத் தூற்றினர்.
அந்நிலையில், நீதிக் கட்சியின் மாகாண மாநாடு வந்தது. சேலத்தில், 27-8-1944 அன்று, பெரியார் ஈ. வெ. ராமசாமி தலைமையில் கூடிய அம்மாநாட்டில், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சி ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது.
அம்மாநாட்டில், அண்ணாவின் பெயரில், சில புரட்சிகரமான கருத்துகள் முன் மொழியப் படும் என்று தெரிய வந்தது. அத்தீர்மானம், கட்சியில் இருந்த சில பெரிய மனிதர்களுக்கு அதிர்ச்சியூட்டின. எனவே, அப்பெரியவர்கள் மாநாட்டுக்கு முன்னதாக, எதிர்ப்பினைத் திரட்டும் பணியில், சிலரை முடுக்கி விட்டார்கள். கட்சியின் பெயர் மாற்றக் கருத்தையும், ‘ஒத்துழையாமை’ நினைப்பையும் முறியடிக்க, ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டார்கள். அம்முயற்சியில் தேவைப்பட்டால், பெரியாரின் தலைமையை