உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேர்தலில் நிற்காதீர்கள்

139

மாற்றினாலும் பரவாயில்லை என்பது ‘பெரியோர்கள்’ செயல் வீரர்களுக்குக் காட்டிய குறிப்பாக இருந்தது.

பெரியாரும், அண்ணாவும் தங்களுக்குள் பேசிக் கொண்டே, அத்தீர்மானங்களைக் கொண்டு வந்தார்கள் என்பது, அப்போது பெரியவர்களுக்குத் தெரியாது.

சுறுசுறுப்பாளர்கள், அண்ணாவை அணுகினார்கள். ஏதேதோ அளந்தார்கள். எவர், எவர் மனங்கள் புண்படும்; எவர், எவர் தேவைப்படும் போது, பெரியாருக்கு எதிராக, அண்ணாவின் பக்கம் நிற்பார்கள் என்றெல்லாம் சொல்லி, ஊக்கப்படுத்த முயன்றார்கள். அண்ணா ஏமாறவில்லை. பொறுமையாகக் கேட்டார்; அமைதியாகப் பதில் உரைத்தார். என்ன பதில்?

‘காந்தியார், உயிரோடிருக்கும் வரை, அவர்தான் தலைவர்: அவரை எதிர்த்து வெல்ல முடியாது; ஜின்னா உள்ள வரை, அவரே இஸ்லாமியர்களுக்குத் தலைவர். மற்றோர் தலைவரைக் காட்ட முயற்சிப்பது, பலிக்காது. அதே போல், பெரியார்தான் நமக்கெல்லாம் வாழ்நாள் தலைவர்; அவருக்கு எதிராகப் போக முயல்வது சரியாகாது.

மாநாடு கூடியது; கட்சியின் பெயரை மாற்றும் முடிவு நிறைவேறிற்று. பின் வரும், நீண்ட முடிவும் செய்யப்பட்டது.

‘கால நிலையையும், உலகப் போக்கையும், சர்க்கார் நிலையையும், நம் மக்கள் நன்மையையும், இதுவரை நடந்து வந்ததன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் உண்டான பயனையும், மற்ற ஸ்தாபனங்களுக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும் நிலைமையையும் நன்றாக, ஜாக்கிரதையாக, ஆலோசித்துப் பார்த்ததில், நம் கட்சியின், சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் தன்மானத்தைக் கோரியும், நமது கட்சியின் பேரால், இது வரை, நமக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போசு விட்டு விட்டோம்.

‘அதாவது, நம் கட்சி தோன்றிய காலம் முதல் இது வரை நாம், பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து, சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களையும் எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலையை உண்டாக்க உதவி செய்து வந்ததும்