உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. இந்தியச் சூழலில்
பாட்டாளிகள் யார்?

உலகில் இந்தியா நீங்கிய வேறெந்த நாட்டிலும் இல்லாத கொடுமை, சாதியேற்றத் தாழ்வாகும். கீழ்ச்சாதி மக்கள் என்று கருதப்படுவோர்களும், தொழிலாளர்களும் ஒரே கூட்டத்திற்கு இரு பெயர்களாகும். சம தூரத்தில் ஓடும் இருப்புப் பாதை போல, இந்தியாவில் ‘சின்ன சாதிகள்’ என்று அழைக்கப்படுபவையும், ‘தொழிலாளர்’ என்று அழைக்கப்படுவோர்களும் இருப்பதைக் காணலாம்.

உடலை வாட்டி, வதைத்துச் செய்ய வேண்டிய தொழில்களைச் செய்வோர் தொழிலாளிகள் ஆவார். நம் இந்தியச் சூழ்நிலையில், சேற்றிலே இறங்கி உழுவோர் யார்? அத்தொழிலாளர்கள், கீழ்ச்சாதி என்று காலகாலமாகக் கருதப்பட்டு வருகிறார்கள். வண்டியோட்டும், வண்டியிழுக்கும் பாட்டாளி யார்? மரபுப்படி கீழ்ச்சாதி. மூட்டை தூக்கிகள், சமுதாய ஏணிப் படிக்கட்டுகளில் கீழே இருப்பவர்கள். துணி நெய்வோர் யார்? அத்தொழிலாளிகளும் கீழ்ச்சாதி மக்கள் என்று கருதப்படுகிறார்கள். குப்பை வாருவோர் யார்? கடைநிலைச் ‘சாதி’.

துப்புரவு (தோட்டி) வேலை செய்யும் மேல் ‘சாதி’ இல்லை. குப்பை வாரும் பெரிய ‘சாதி’ இல்லை. நெய்தலும், உழுதலும் செய்யும் மேட்டுச் சாதிகள் இல்லை. எனவே, தன்மான இயக்கம், தொழிலாளர் நலத்தில், இயற்கையான அக்கறையும், ஈடுபாடும் கொண்டிருந்தது.

1929இல் செங்கற்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில், தொழிலாளர் நலன் பற்றி, ஒரு குறிப்பிடத்தக்க முடிவினை மேற்கொண்டார்கள். அது நாட்டு நலனுக்குத் தொழிலாளர் நலன் தேவையென்று சுட்டிக் காட்டியது; சுக வாழ்க்கைக்குத் தேவையான ஊதியம் வேண்டுமென்பதை வற்புறுத்திற்று. தொழிலில் கிடைக்கும் இலாபத்தில், தொழிலாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டுமென்றது. இன்றைக்கும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத, ஆனால், நாகரிக சமுதாயத்தில்