20
பெரியாரும் சமதர்மமும்
நிலவ வேண்டிய முற்போக்குக் கொள்கைகளை, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, பெரியதோர் மாநாட்டில் வைத்து, ஒப்புதல் பெற்ற பெருமை, சுயமரியாதை இயக்கத்திற்கு உரியதாகும். தொழிலாளர் நலன் பற்றிய மாநாட்டு முடிவு இதோ:
‘நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களுடைய முன்னேற்றம் அவசியமானபடியால், அவரவர்களின் வேலைக்குத் தகுந்தபடியும், அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுக்கவும், ஒவ்வொரு தொழிலிலும் கிடைக்கும் இலாபத்தில், அந்தத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டுமென்றும், இம்மாநாடு தீர்மானிக்கிறது.’
இலாபத்தில் பங்கு கொடுக்கும் திட்டத்தை, ஈ.வெ.ரா., பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னரே, ஈரோட்டுப் பெரு வணிகராக இருந்த காலத்திலேயே, நடைமுறைப் படுத்தினார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது இயற்கை. அவை சிற்சில வேளை, போராட்டங்களாக உருவெடுப்பதும் உண்டு. அவை தனியுடைமை அமைப்பின் நோய்களாகும். அத்தகைய போராட்டங்கள் வெடிக்கும் போது, அரசு நடு நிலைமை வகிக்க வேண்டும்; சட்டம், அமைதி காக்கிற சாக்கில், இருக்கும் சுரண்டல் நிலைக்குத் துணை நிற்பது சரியல்ல. சில வேளை, வேலை நிறுத்தத்தை உடைக்க, பலவித சூழ்ச்சிகளில், தொழிலதிபர்கள் முனைவதுண்டு. அந்தச் சமயங்களில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய ஆட்சி, செல்வமும், செல்வாக்கும் மிகுந்த தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவும், வாழ்க்கைப் போராட் டத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவும் நடந்து கொள்ளக் கூடாது; நடு நிலைமையில் இருத்தல் வேண்டும். இதுவே சரியான நடைமுறை; நீதியான நடைமுறை. இதைச் செங்கற்பட்டு மாநாடு—அரை நூற்றாண்டுக்கு முந்திய மாநாடு—வரையறுத்துச் சொல்லுகிறது.
அம்மாநாட்டுக்கு முந்திய இரண்டு ஆண்டுகளில், ஆங்கிலேயருடைய சொத்தாக இருந்த தென்னிந்திய இரயில்வேக்கும், அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்குமிடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன. இரயில்வே தொழிலாளர் பொது வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நிலையை—