24
பெரியாரும் சமதர்மமும்
தீவிர முயற்சிகளால் வெற்றி பெறாத நிலையில் இருப்பதால், பொதுமக்கள் முன்னேற்றத்தைக் கருதி, அவைகளைச் சட்டத்தின் மூலம் ஒழிக்க வேண்டுமென்று இம்மாநாடு கருதுகிறது.’—இம்முடிவு, ஈரோட்டில் நடந்த இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டின் முடிவுகளில் ஒன்றாகும்.
சட்டத்தின் வலிமை சேர்ந்ததால் அல்லவா, பிற்காலத்தில் கோயில் நுழைவு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமையாயிற்று! தீண்டாமையை எந்த வடிவத்திலும் அனுசரிப்பதைத் தடை செய்யும் அரசியல் சட்டம் இருப்பதாலன்றோ, வெளியே நிறுத்தி, கொட்டாங்குச்சியில் தேனீர் ஊற்றுவதைக் குற்றமாக்கித் தண்டிக்க முடிகிறது? சட்ட ஆதரவு இல்லாத எந்தச் சீர் திருத்தமும், மணல் வீடு கட்டியதற்கு ஒப்பாகும். சட்ட ஆதரவு இல்லாத நிலையில், தனிப்பட்ட முற்போக்காளர்கள் சிலரோ, பலரோ வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட சமூக சமத்துவமோ, பொருள்களைப் பகுத்துண்ணுதலோ, பரந்த சமுதாய வாழ்க்கை முறையாகி விடாது
செல்வர்கள், தாங்களாகவே அறங்காவலர்களாகி, சமுதாயத்தைத் தாங்கிக் கொள்வார்கள் என்னும் கற்பனையில், மதி மயங்கி இந்தியா நாற்பது ஆண்டு தன்னாட்சியை வீணாக்கி விட்டது. சட்டபூர்வமாக நில உச்ச வரம்பு வந்ததால், பெரிய புள்ளிகள், தந்திரமாகத் தப்பித்துக் கொண்டாலும், எண்ணற்றோரிடமிருந்த நிலக் குவியல்கள் குறைந்தன. செல்வர்கள், அறங்காவலர்கள் ஆகி விடுவார்கள் என்று நெருப்புக் கோழியின் மனப்போக்கை மேற்கொள்ளாதிருந்தால், என்ன செய்திருப்போம்? பிற வகையான சொத்துக்களை நாட்டுடைமையாக்கா விட்டாலும், அவற்றிற்கும் உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்திருப்போம். நடக்க முடியாத அற்புதங்கள் நடக்குமென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே வந்ததால், ‘பெருந்தொழில்களா, சிறு தொழில்களா?’ என்னும் வெட்டி மன்ற வாதங்களில், இத்தனை ஆண்டுகளைப் பாழாக்கி விட்டோம்.
ஈரோட்டு மாநாட்டுக்குத் திரும்புவோம்.
‘பூசாரிகளுக்குத் தற்காலம் விடப்பட்டிருக்கும் மானியங்களை ரத்து செய்ய வேண்டுமென்பது’ அம்மாநாட்டின் மற்றோர் முடிவு ஆகும். இது பூசாரிகள் மேல் உள்ள வயிற்றெரிச்சலால் செய்யப்பட்ட முடிவு அல்ல. பின் எதனால்? வணங்குவோருக்கும், வணங்கப்படுவதற்கும் மத்தியில், தரகரையோ, பூசாரியையோ ஏற்-