62
பெரியாரும் சமதர்மமும்
இடமில்லையானால், கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆக வேண்டும். அந்த அய்தீகப்படியே, புரட்சி தோன்றியிருப்பதால், புரட்சியைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை.
“நமது முதலாளித்துவ ஆட்சியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதாக, குடி அரசை அதன் முதுகுப் புறத்தில் குத்தி விட்டது. இந்தக் குத்தானது, ‘பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான், முதலாளி வர்க்கத்தை அழிக்கமுடியும்’ என்ற ஞான போதத்தை உறுதிப் படுத்தி விட்டது.”
புரட்சியின் முதல் தலையங்கம் தொடர்ந்து கூறுவதாவது:
மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி.
மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி.
மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி.
மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை.
மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்.
மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.
மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கிற முடிவின் பேரிலேயே, புரட்சி தோன்றியிருக்கிறது.
அய்ம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தலையங்கத்தைப் படித்தேன். உலக வரலாற்றை அளவு கோலாகக் கொண்டு, அளந்து பார்த்தேன், அத்தனையும் சரியாக இருக்கக் கண்டேன். இப்போது படிக்கிற நீங்கள், இதைப் பல முறை சிந்தியுங்கள். ஒவ்வொன்றும், முழு உண்மை என்பது புலனாகும்.
கருத்து மண்டலத்தில் உலாவிய பொது உடைமைக் கொள்கைக்கு, முதன் முதல் செயல் உருவம் தந்த மாமனிதர், தோழர் லெனின் ஆவார். சமதர்ம முறையின் வளர்ச்சி பற்றி நினைக்கிற எவரும், அதற்கு வித்தூன்றிய லெனினைப் பற்றி நினைப்பது இயற்கை.
எனவே, ‘புரட்சி’, புதிய உலகம் தோற்றுவித்த லெனினைப் பற்றிய கட்டுரையைத் தாங்கி வந்தது. சோவியத் இரஷ்யாவில் நீதி முறை என்ற தலைப்பில் பல தொடர் கட்டுரைகளை வெளி-