பெரியாரும் அவர் தங்கையும் சிறைப்பட்டனர்
81
ஆசிரியர். திருமதி கண்ணம்மாள் அதை வெளியிடுபவர். எனவே, புரட்சி அலுவலகத்தைக் காவல் துறையினர் சோதனையிட்டார்கள். நாற்பத்தாறு கடிதங்களைக் கைப்பற்றிக் கொண்டு போனார்கள். இருவர் பேரிலும் சாட்டப்பட்ட குற்றங்கள் எவை! பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியது; இரண்டாவது அரசு வெறுப்பு ஊட்டியது.
இக்காலத்தில் நிர்வாகமும், நீதியும் இணைந்திருந்தன. மாவட்ட நிர்வாகத்திற்குப் பொறுப்பாளியான மாவட்ட ஆட்சியாளரே, மாவட்டக் குற்றவியல் நடுவராகவும் செயல் பட்டார்.
ஈ. வெ. ராமசாமி, கண்ணம்மாள் இவர்களின் வழக்கு கோவை மாவட்டக் குற்றவியல் நடுவராகிய ஜி. டபில்யூ. வெல்ஸ் முன் வந்தது.
வழக்கம் போல், ஈ.வெ. ரா. எதிர் வழக்காடாமல், வழக்கு மன்றத்தில் தன்னிலை விளக்க அறிக்கையைப் படைத்தார். அதைப் படிப்போம். அது வருமாறு:
(1) என் பேரில் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.
(2) வழக்குக்கு அஸ்திவாரமான ‘குடியரசு’ தலையங்கத்தை இப்போது பல தரம் படித்துப் பார்த்தேன், அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
(3) அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது, வாக்கியங்களுக்காவது ராஜத் துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால், இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப் பற்றி, ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ, யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப் பட்டதாகும்.
(4) என்ன காரணத்தைக் கொண்டு என் மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்
—6—