உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்த 'வசந்தம்'

“எனக்கென்று ஒரு 'வசந்தகாலம்' இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஆண்டு பலவற்றுக்குப் பிறகு—அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு, இன்றைய கவலை மிக்க நாட்களிலே எழமுடியாத புன்னகையைத் தருவித்துக்கொள்கிறேன். பெரியாருக்கு அந்த 'வசந்த காலமும்' தெரியும்; இன்று பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

'வசந்தகாலம்' என்றேனே அந்த நாட்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் 'காடு மேடு' பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடுமேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது வண்ண வண்ணப்பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.

அப்போது 'கலவரம் எழாமல்' ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும்—பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படுமுன்னர், தலைபோகும் —தாடிபோகும்—தடிபோகும்—உயிர் போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

பெரியாரால் திருந்திய தமிழரோ பலப்பலர்

அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார்— ஆமாமய்யா! என்று பொருளற்ற ஒரு பதில் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்கமாட்டார்—வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம், பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில் உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந்திருப்பின், அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக 'மாலை' வாங்கிக்கொண்டு-