6
தான் வருவார்! அத்தகைய தெளிவும், வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப்பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்...
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு இங்கின்றி வேறெங்கும் இருந்ததில்லை.
அந்த 'வரலாறு' துவக்கப்பட்டபோது நான் சிறுவன்.
அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாட்களிலே ஒரு பகுதியில், நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாட்களைத்தான் என் 'வசந்தம்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர் பற்பலர். அவருடன் மற்றப் பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாட்கள் எனக்கு மிகவும் இனிமையான நாட்கள்; இன்றும் நினைவிலே கொண்டுவரும்போது இனிமை பெறுகின்றேன்.
எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்
எத்தனை எத்தனையோ கருத்துக்களை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதனை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத்தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும் அக மகிழ்வும், மன நிறைவும் பெற்றிடச் செய்தார்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக்கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன்; 'உன்னை எனக்குத் தெரியும் போ!' என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டிருக்கிறேன்; ஒரு நாள் கூட அவர் என்னி-