உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தில், ஒரு பெரிய குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு திக்கிற்குச்சென்று, 'நான் இந்தத் திக்கில் போய் இதைக் கொண்டு வந்தேன்; அண்ணன் அந்தத் திக்கிலே போய் அதைக்கொண்டுவந்தான்.' என்று சொல்வதைப் போல் அவருடைய பிள்ளைகள், எல்லாக்கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சியில் அவர்கள் இல்லை? எந்தப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் சோடை போனவர்கள் அல்லர். அவர்கள் எதையெதைப் பெறவேண்டுமென்று கருதுகிறார்களோ, அதைப்பெற்றுக் குடும்பத்தில் நடக்கிற விழாவில் அவர்கள் பெற்றவற்றைப் பெரியார் அவர்களிடம் காட்டி, 'இதோ பாருங்கள் நான்பெற்றது' என்று ஒவ்வொருவரும் காட்டும்போது உரிய புன்னகையோடு அவற்றைப் பார்த்து, 'நான் கேட்டது இதுவல்லவே' என்கிறார்கள்; அவர்கள் கேட்டதைப் பெற்றுத் தரத்தக்க ஆற்றல் யாரிடத்திலும் இல்லை. ஆனால், அதைப் பெற்றுத்தரும் பொறுப்பு அவர்களிடத்தில்தான்! அப்படிப் பெற்றுத்தந்தால் அதைப் போற்றிப் பாதுகாத்துக்கொள்ள என்னாலே முடியும்; அது கிடைத்தால் யாருக்கு என்ன பங்கு என்று கேட்கச் சிலர் இருக்கலாம்.

பெரியாரின் அறிவுப்புரட்சி வெற்றி பெற்றே தீரும்

வர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப்புரட்சி சுலபத்தில் நிற்கப்போவதில்லை. அது போகவேண்டிய தூரத்திற்குப் போய், அடையவேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடையவேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ அதைப்போல், அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலட்சியத்தை அடையவேண்டுமோ அதையடைந்தே தீரும்; அதில் அய்யம் யாருக்கும் இல்லை; அதில் கால அட்டவணையைக்கூட நாம் கருதத் தேவையில்லை. அந்தப் பாதையிலே நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.