இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-
இவர்தான் பெரியார்!
கல்லூரி காணாத கிழவர்! காளைப் பருவ முதல் கட்டுக்கடங்காத முரடர் ! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர்! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாகப் பேசுவரே, வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்! யார் யாரைத் தூக்கிவிடுகிறாரோ; அவர்களாலேயே தாக்கப்படுவர்! அவர் யாரைக் காணவேண்டுமோ, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர் தமிழ் ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர் ! ஆரிய மதம்; கடவுள் எனும் மூடு மந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர்.
பேரறிஞர் அண்ணா, 'விடுதலை வரலாறு'