உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-

அமெரிக்காவிலிருந்து
அண்ணன் எழுதிய அஞ்சல்

பேரன்புடைய பெரியார் அவர்கட்கு.

வணக்கம்.

என் உடல்நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது. வலியும் அதற்குக் காரணமாக இருந்து வந்த நோய்க்குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும், இளைப்பும் இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனையின்படி இத்திங்கள் முழுவதும் இங்கு இருந்துவிட்டு, நவம்பர் முதல் வாரம். புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி பரிமளம், செழியன், ராஜாராம், டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்துக்கொள்கிறார்கள். சென்னை மருத்துவ மனையிலும் விமானதளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடன் இருந்த தோற்றம் இப்போது என் முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவேதான் கவலைப்பட வேண்டியநிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு என் நன்றி. தங்கள் பிறந்தநாள் மலர் கட்டுரை ஒன்றில்