உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பகுத்தறிவே இளஞர்களை ஆளவேண்டும்

"பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்கான பணிகளையும் செய்யவேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச்செய்பவர்களாக நீங்கள் திகழவேண்டும்.

பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங்கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.

அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒரு முறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும் அந்த முறைகளை இளமை குன்றாது தீவிரத் தன்மையோ டு கூடியதாக வைத்திருக்க நாம் தவறிவிட்டோம். நம் வாழ்க்கை முறை நிலைக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக்கொள்ளத்தக்க, புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்கவேண்டும்.

பெரியாரைப் பின்பற்றுவோம்

நெடுங்காலமாக பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக் கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.

இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது