25
காலத்தை உருவாக்கித் தந்துவிட்டு, அதை அவர் கண்டு களிக்கவேண்டும் அதிலேதான் அவர் கவலை—லட்சியத்தில் வெளிப்படையாகத் தெரிகிற பொன் ஓவியத்தை அவர் காண இயலும் அதைக் காணுவதற்கான அறிவாற்றலோடு, திறமையோடு, தகுதியோடு தமிழ்மக்கள் இன்றைய தினம் அவரை இலட்சக்கணக்கான பேர் பின்பற்றிக்கொண்டு வருகிறார்கள். அவர்களிலே ஒருவனாக இருப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய உளம் கனிந்த நன்றியை நான் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்—அவர்களுடைய அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்ற முறையில் என்றைய தினமும் அவர்கள் கடுமொழியைக் கேட்காதவன் என்ற முறையிலே, அவர்களுக்கு என்னிடமிருக்கின்ற தனிப்பட்ட பாசத்திற்கு என்னுடைய இதயம் கலந்த, கனிவு நிறைந்த, நட்பு மிகுந்த, தூய்மை நிறைந்த வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
[திருச்சியில் 17-9-67-ல் நடைபெற்ற தந்தை பெரியார்
அவர்களின் 89-வது பிறந்தநாள் விழாவிற்குத்
தலைமையேற்று ஆற்றிய உரை]
இராமாயணத்தை எரிப்பது எதற்காக?
இராமாயணம், பெரியபுராணம் ஆகியவை புளுகுகள். அவை மக்களின் மனத்தைப் பாழ் செய்கின்றன; ஒரு இனத்தை ஒரு இனம் ஆதிக்கம் செய்ய வேலை செய்கின்றன. ஆகவே, அவை களை மக்கள் வெறுக்க வேண்டும்—கண்டிக்க வேண்டும் என்பதைக் காட்டவே நாங்கள் அவைகளைக் கொளுத்தவேண்டுமென்று கூறுகிறோமே யன்றி, அவைகளைக் கொளுத்திவிடுவதாலேயே மூடப்பழக்க வழக்கம் போய்விடும் என்று நாங்கள் சொன்னதில்லை.
[11-2-44ல் ஈரோட்டில் தமிழ் மாநில
நாடகக் கலை அபிவிருத்தி மாநாட்டில்]