உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ்ச் சமுதாயத்தின் உயிர்ச்சக்தி பெரியார்

இப்படி ஒரு சமூகத்தை, நாட்டுமக்களை ஆளாக்கி விட்ட பெருமை உலகத்தில் பல தலைவர்களுக்குக் கிடைத்ததில்லை; நம்முடைய தமிழகத்தில் பெரியார் அவர்களுக்குத்தான் அந்தத் தனிப்பெருமை சேர்ந்திருக்கிறது; அந்தப் பெருமைக்குரியவர்களாக நாம் நம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர் அளித்துள்ள செல்வம்—அவர் நமக்குக் காட்டியுள்ள லட்சியப்பாதையில் நடந்து செல்லுதற்கேற்ப ஆற்றல் நமக்கு வரவேண்டுமென்று, அவர் இன்றைய தினம் நமக்கெல்லாம் வாழ்த்துச்சொல்ல வேண்டும். அந்த வாழ்த்துநமக்குப் புதிய வல்லமையை, புதிய உற்சாகத்தைத்தரும் என்பதில் அய்யமில்லை.

அய்யாவே! தமிழினத்தை வாழ்த்துங்கள்

"என்னுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டவர்களே! என்னுடைய வழியைப் பின்பற்றியவர்களே ! நாம் செல்லுகின்ற பயணம் மிக நீண்ட பயணம்; அதிலே நடந்து செல்வதற்கான வல்லமை, வலிவு தாங்கும் சக்தி உங்களுக்கெல்லாம் வேண்டும்; அவைகள் எல்லாம் உங்களுக்கு வரவேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்" என்று அவர் நமக்கு வாழ்த்துக்கூற வேண்டும்.

பெரியார் கட்டளையை ஏற்போம்

அப்படிப்பட்ட வாழ்த்தை நமக்குக் கொடுத்து வழிகாட்டி, அழைத்துச் செல்ல அவர்களைப் பார்த்துக்கேட்கும்போது, அவரே பார்த்து, யார் யாரை எங்தெந்த வேலைக்கு அனுப்ப வேண்டுமென்று கருதுகின்றாரோ, அந்தந்த வேலைக்கு அனுப்பி தமிழகத்திற்கு மொத்தத்தில் நன்மை கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை, அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்து இன்னும் பன்னெடுங்காலம் நம்மோடு வாழ்ந்திருந்து, நம்முடைய தமிழகம் யாருக்கும் தாழ்ந்துவிடாமல், யாரையும் தாக்காமல், எவராலும் சுரண்டப்படாமல், எந்தப் புரட்டுக்கும் ஆளாகா மல், எந்தப் புரட்டையும் மூட்டிவிடாமல் தன்னிகரற்ற