உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

தமிழர் வாழ்வினை உயர்த்திய
பேராசிரியர் பெரியார்!

......பெரியார் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும்; அதுவும் பகுத்தறிவு கல்வியாக இருக்கவேண்டும்; அதற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துச் சொல்லவேண்டும். இதை அரை நூற்றாண்டாக எடுத்துச் சொல்லிவருபவர் பெரியாரவர்கள் ஆவார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், என் திராவிடநாடு பத்திரிகையில் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக் கவிஞர்கள் பல நாட்டுப் பேராசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, நமது தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார்' என்று எழுதியிருக்கின்றேன். அவர் சமுதாயத்தில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துக்களை, கொள்கைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் பெறவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான் பயிர் வளர முடியும்: அதுபோல், மனவளம் பெற்றவர்களால்தான் பெரியாரின் கருத்துக்களை ஏற்க முடியும். ஆனால், அவரது தொண்டு வீண் போகவில்லை. பெரியார் அவர்களின் 30, 40 ஆண்டு தொண்டுகளுக்குப் பிறகு, புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை ? பள்ளிகள் எத்தனை? என்ற கணக்கில் பார்த்தால்; தமிழகத்தில் அறிவுப் புரட்சி நடைபெற்றிருப்பதும், வெற்றி பெற்றிருப்பதும் தெரியும். பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரசாரத்தின் வலிமை எவ்வளவு என்பதும் தெரியும். அவர் பிரசாரத்தைத் துவங்கிய காலத்தில் பல வகுப்பார்

படிப்பதற்கே அருகதையில்லாதவர்களென்று ஏட்டிலே எழுதிவைக்கப்பட்டதுமட்டுமல்ல, நாட்டிலே சொல்-

3