உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

லப்பட்டும் வந்தது. அந்த வகுப்பாரே கூட நம்பினார்கள் நமக்குப் படிப்பு வராது என்று ! நாம் எதற்காகப் படிக்க வேண்டுமென்று அவர்கள் தெரியாமல் தடுமாறினார்கள். நான் கல்லூரியில் பொருளாதார 'ஆனர்சு' வகுப்பை எடுக்கச் சென்றபோது, அங்கு ஆசிரியராக இருந்த ஒரு பார்ப்பனர் இந்தப் பொருளாதாரப் பாடம் உனக்கு வருமா? உனக்கேன் இது ? வேறு ஏதாவது எடுத்துக்கொள்!' என்று கூறி, என் ஆர்வத்தைக் குறைக்கப் பார்த்தார். நான் பொருளாதாரத்தையே எடுத்துச் சிறந்த முறையில் தேர்வும் பெற்றேன்.

நான் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

நமது இன மாணவர்கள்
திறமைக்கோர் எடுத்துக்காட்டு

நம் மாணவர்கள் ஒன்றும் அறிவில் குறைந்தவர்கள் அல்லர். அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், வாய்ப்யும். கொடுத்தால், முற்போக்குச் சமுதாயத்தோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்து விடுவார்கள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசியுள்ளன், அதற்குமுன் தமிழகத்தில் தலைசிறந்த வக்கீல்கள் யார் என்றால், ஒரு அல்லாடி கிருஷ்ணசாமி; தலைசிறந்த டாக்டர் யார் என்றால், ஒரு ரங்காச்சாரி; சிறந்த நீதிபதி யார் என்றால், முத்துச்சாமி அய்யர்; சிறந்த நிர்வாகி யார் என்றால், கோபால்சாமி அய்யங்கார். இப்படித்தான் சொல்லக்கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது என்று சொல்லி வந்தேன். இன்றைய தினம் எந்தத் துறையில் எடுத்துக்கொண்டாலும் இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இருந்தவர்கள் முதல் தரமான வக்கீல், தலைசிறந்த மருத்துவர் என்று இப்படித்தான் இருக்கிறார்கள். சர் .ஏ.ராமசாமி முதலியார் அரசியலில் இருந்து விரட்டப்பட்டார் என்றாலும் அய்தராபாத் சம்மந்தமாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தி-