உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

பெரியாரவர்கள் கருத்துக்களைச்
செயலாக்க நான் தயார்

பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகிற கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே இருந்துகொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா ? அல்லது விட்டுவிட்டு உங்களிடம் வந்து, தமிழகத்திலே இதே பேச்சை, பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா ? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியாரவர்களுக்கே விட்டுவிடுகின்றேன். அவர்—என்னோடு வந்து, 'பணியாற்று' என்றால் —அதற்குத் தயாராக இருக்கின்றேன்.

சமுதாயப்பணிக்குப் பெரியாரைத் தவிர
வேறு ஆளே இல்லை

கோலாரிலே தங்கம் கிடைக்கிறது என்றால், பூமியை வெட்டியவுடன் அது பாளம் பாளமாகக் கிடைப்பதில்லை. கல்லை வெட்டி, அதைக் கறைத்து அறைத்துக் காய்ச்சிய பின்தான் மின்னும் தங்கத்தை எடுக்கின்றனர். அவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கிறது. அதுபோன்றுதான் சமுதாயச் சீர்திருத்தப்பணியாகும். பெரியார் அவர்களுக்கு நாம் தந்துள்ள சமுதாய சீர்திருத்த வேலை, அவர் இறுதி மூச்சுள்ளவரை செய்துதீரவேண்டிய வேலை. ஏனென்றால், அந்தப் பணியைச் செய்வதற்கு அவரைத் தவிர வேறு ஆள் இல்லை: நேற்று இருந்ததில்லை ; நாளைக்கு வருவார்களா என்பதும் அய்யப்பாட்டிற்குரியது. பெரியார் அவர்கள் செய்யும் வேலையில் மனநிம்மதியோடு இருக்கலாம். தமிழகம் இன்று எந்தப் புதுக்கருத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும், தாங்கிக்கொள்வதற்கும் தயாராக இருக்கிறது. அது செயல்வடிவத்திலே வருவதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவரது கருத்துக்களும், கொள்கைகளும் இன்னும் முற்றும் செயல்படவில்லை; அது செயல்வடிவத்திற்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்-