உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கலாம். ஆனால், அது செயல்பட்டே தீரும். பெரியாரவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகச் சிறந்த பணி: நம் நாட்டிற்கு மிகத் தேவையான பணி! அதனை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பெரியாரவர்களுக்கே உண்டு. ஆனாலும் அவருக்கு ஓய்வு கொடுத்து அவரது வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பகுத்தறிவை வளர்க்கும்
படிப்பே தேவை

பள்ளிக்கூட ஆசிரியர்கள் பகுத்தறிவோடு சொல்லிக்கொடுப்பார்களேயானால், இன்னும் பத்து ஆண்டுகாலத்தில், நமது மாணவர்கள் மற்ற உலக மாணவர்களோடு போட்டிபோடக் கூடிய அறிவில் முன்நிற்கக்கூடிய அளவில் செய்துவிடமுடியும். நமது பள்ளிகளில், கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கப்படுகிற கல்வி,அவன் கல்லூரியைவிட்டு வெளியேறும்போது வெறும் எழுத்தறிவுக்குப் பயன்படுகிறதே.தவிர, பகுத்தறிவுத் துறைக்குப் பயன்படக்கூடியதாக இல்லை. இப்போது நாட்டிலிருக்கின்ற கல்வித்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். அதுபற்றி கல்வி நிபுணர்களோடு கலந்து ஆலோசித்துப் புதுக்கல்வித்திட்டம் வகுக்க வேண்டும்.

பெரியாரால் கிடைத்த முதல் வரவேற்பு

இன்று பெரியாரவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். உண்மையாகவே இது எனக்குப்பெருமைதான். இதைவிட நான் பெருமையாகக் கருதுவது, பெரியார்வர்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ என்னவோ; எனக்கு ஈரோட்டில், முதன்முதலில் நகராட்சியில் வரவேற்புக் கொடுக்கச் செய்து சால்வை போர்த்தினார்கள்; அதை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. எனக்கு முதன்முதல் வரவேற்பு என்பதே ஈரோட்டில் நகராட்சியால் கொடுக்கப்பட்டதுதான். அதன்பின், இப்போது நிறைய வர-