39
வேற்புக் கொடுக்கிறார்கள் என்றால், அவை எனக்காக அல்ல, பதவிக்காகக் கொடுக்கப்படுவதேயாகும். பெரியாரவர்கள் இடையிலே சில ஆண்டுகள் எனக்குக் கொடுக்கவேண்டிய பரிசுகளையெல்லாம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்.
பெரியாரின் கட்டளைப்படியே
நான் நடப்பேன்
இன்றுமுதல் பெரியார் இருக்கிற இடத்தில் நானிருப்பேன்; நானிருக்கிற இடத்தில் அவருடைய கருத்திருக்கும். எனவே, இனிமேலும், பெரியாரும் அண்ணாதுரையும் ஒன்றுசேர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது அரசியல் உலகத்தில் யாரோ சிலருக்கு ஒரு வித சந்தேகத்தை உண்டாக்கி, அவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து விட்டார்களாமே என்கிற கலவரத்தையும் உண்டாக்கக் கூடுமாதலால், இனி அப்படிக் கூற வேண்டாமென நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பெரியாரை நாம் கஷ்டப்படுத்திவிட்டோம்
நாம், பெரியாரை வெகுவாகக் கஷ்டப்படுத்தி விட்டிருக்கிறோம். அவர் இப்போது ஓய்வெடுத்துக்கொண்டு கட்டளையிடவேண்டிய வயது. அவரது தொண்டினை நாம் மேற்கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்படவில்லை. ஆனதனாலே நாம் அவருக்குக் காட்டவேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக்கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன் என்பதையும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
[19-12-67. அன்று நாகரசம்பட்டியில்,
புதிதாகக் கட்டப்பெற்ற 'பெரியார் ராமசாமி
கல்விநிலைய' த்தினைத் திறந்துவைத்து ஆற்றிய உரையின் ஒருபகுதி]