பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3


   நாம் மனித இயற்கையின்பாற்பட்டு ஒரு குறிப் 

பிட்ட இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறோம். நான் பெரியாருடன் இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன் அரித்துவாரத்திற்குப் பெரியாருடன் நானும் சென்றேன். கங்கைநதி தீர்த்தில் அவர் கம்பீரமாக நடந்து செல்கை யில் வீசிய தென் றல் பெரியாரின் வெண்தாடியைத் தழுவி அசைத்து, அவர்மேல் போட்டிருந்த மஞ்சள் சால்வையையும் அசைத்துச் சென்றது. எனக்கு அவர் கம்பளிக்கோட்டு வாங்கிக்கொடுக்காத காரணத்தால், நான் குளிரால் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் பின் சென்றேன். அது குருவுக்குப்பின் சீடன் மிகுந்த பய பக்தியுடன் செல்வது போல் இருந்தது. பெரியாரைக் கண்டதும் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் பெரியசாமி யார் என்று அவரையும், அவருக்குப்பின் கைகட்டிச் சென்ற என்னை அந்தச்சாமியாரின் (பெரியாரின் சீடன் என்றும் கருதி, வழி நெகே எங்கள் காலில் விழுந்தனர். பெரியார் அவர்கள் என்னைப் பார்த்து, ' நம் நாட்டு மக்கள் யாரையெல்லாம் சாமியாராக்குகிறார்கள் பார்' என்று சொன்னார்கள்.

பகுத்தறிவால்தான் மனித சமுதாயம் முன்னேற முடியும் * .

   பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால் 

தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவரமுடியும் என்றும், அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத் திலிருந்து அகற்றப்பட வேண்டுமென்பதற்காகவும் பாடு பட்டுக்கொண்டுவருகிறோம்.மதவாதிகள் மதத்தில்தான். நியாயம் இருக்கிறது; மதம்தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டி என்று கருதிக்கொண்டிருக்கின்றனர். சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிகள் -

   சுயமரியாதை இயக்கம் வளர்ந்து வளர்ந்து பெண்ணு 

ரிமை பெற்றிருக்கிறது; ஆலயங்களில் நுழையும் உரிமை பெற்றிருக்கிறது; இன்னும் பல உரிமைகளைத் தமிழர் களுக்குப் பெற்றுத்தந்துள்ளது. தமிழர்களின் குடும்பங்