பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரியோர் வாழ்விலே வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அப்போதே இருந்திருக்கிறது: డి 登g 豪酸 குதிரைப் பந்தபத்தில் கூட்டத்தைத் திகைக்க வைத்தானே, அதே பையன் அடிக்கடி அப்பா வையும் திகைக்க வைப்பது வழக்கம். ஆம், கேள்வி மேல் கேள்வி கேட்டு அப்பாவைத் திகைக்க வைத்துவிடுவான்! - தினந்தோறும், இரவு சாப்பாட்டுக்குப் பிறகு அப்பாவின் அருகிலே போய் அவன் உட்கார்ந்து கொள்வான்: அது ஏன் அப்படி இருக்கிறது? இது ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்றெல்லாம். கேள்வி கேட்டான். அவர் அவனுடைய கேள்வி களுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் கூறுவார். சில சமயங்களில், அவன் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில்கூற முடிவதில்லை. அப்போது அவர் திகைப்பார். இரவில் அப்பா படுத்த பிறகுகூட அவன் அவ ரைத் துரங்கவிடமாட்டான். பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருப்பான். இப்படி, அவன் அடிக்கடி கேள்வி கேட்பது அவ னுடைய பாட்டிக்குப் (அப்பாவைப் பெற்றவள்) பிடிக்கவில்லை. டேய்,ஏன் இப்படி அவனைத் தொந்தரவு செய்கிருய் அவனைத் துரங்கவிடமாட் டாய் போலிருக்கிறதே!” என்று கோபித்துக் கொள்ளுவாள். தன் மகனுடைய து.ாக்கம் கெட்டுப் போகுமே என்று அவள் கவலைப்பட்டாள்!