பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியைத் தேடிப் புறப்பட்டவர் அதே சமயம், அந்தச் சிறுவன் தன்னுடைய குதிரை மீதேறி கம்பீரமாக அங்கு வந்து சேர்க் தான். அவனைப் பார்த்ததும், அங்கு கின்றவர்களில் சிலர், தம்பி, நீயும் பந்தயத்திலே கலந்து கொள்ளப்போகிருயா?...உம், கலந்து கொள். உனக்குத்தான் முதல் பரிசு!’ என்று வேடிக்கை யாகக் கூறினர். உடனே, அந்தப் பையனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. தன்னுடைய குதிரையைத் தட்டி விட்டான். காலுகால் பாய்ச்சலில் ஒடிக் கொண் டிருந்த பந்தயக் குதிரைகளின் பின்னல், அவனு டைய குதிரையும் வெகு வேகமாக ஓடியது. ஆணுல், அந்தக் குதிரையின் சேனத்தில் கால் வைத்துக்கொள்வதற்கான ப டி க ள் (Stirrups) இல்லை. ஆனாலும், அந்தப் பையன் கீழே விழாமல் தன் முழங்கால்களால் சேணத்தை இறுக்கிப் பிடித் துக் கொண்டான். அதனல், குதிரை தாவித் தாவிச் செல்லும்போது, முழங்கால்கள் சேணத்தில் உராய்ந்தன; இரத்தம் வழிய ஆரம்பித்தது. ஆயினும், அவன் சளைக்கவில்லை. விடாப் பிடியாகக் குதிரையை ஒட்டி, பந்தயத்தை முடித்தே தீர்த்தான். பந்தயத்தில் அவன் வெற்றி பெருவிட்டாலும், அவனுடைய விடாமுயற்சி யைக் கண்டு எல்லோரும் வியந்தனர். - ೯Tುಖ676 துன்பங்கள் இடையிலே வந்தாலும், எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துவிட