பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 பெரியோர் வாழ்விலே கினைத்தான். பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த தால், அன்றே செல்ல வேண்டும் என்று ஜமீன் தாரிடம் தெரிவித்தான். ஜமீன்தார் சிறிது தயங்கினர். பிறகு, 'தம்பி, நீ இப்போதே புறப்பட வேண்டுமென் கிருய்...சரி, புகைவண்டி நிலையம் வரையிலாவது உன்னைப் பல்லக்கில் கொண்டுபோய்விட வேண் டாமா? ஆல்ை, பல்லக்கு வேறு ஓரிடத்திற்குப் போயிருக்கிறதே! அது எப்போது வருமோ? ...” என்ருர். 'அதனுல் கவலையில்லை. உங்களிடம் குதிரை இருக்குமே, அதைக் கொடுங்கள். அதில் ஏறிப் புகைவண்டி கிலேயத்துக்குச் செல்கிறேன்.” "இப்போது ஒரே ஒரு குதிரைதான் இருக்கிறது. அதுவும் முரட்டுக் குதிரை. தன்மீது ஏறுகிறவர். களைக் கீழே தள்ளி மிதித்துவிடும். பொல்லாதது:” 'அப்படியா! சரி, அது எங்கே கிற்கிறது? நான் பார்க்கலாமா ?” - - ஜமீன்தார் அவனே அழைத்துக் கொண்டு குதிரை கிற்கும் இடத்திற்குச் சென்ருர். அங்கே கின்ற முரட்டுக் குதிரையை அவன் பார்த்தான். பிறகு, மெல்ல அதன் அருகே சென்று அதைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான். உடனே, அந்த முரட்டுக் குதிரை முன்னங் கால்கள் இரண்டையும் துக்கிக்கொண்டு அவனை மிதிக்க வந்தது; பற்களையும் காட்டிப் பயமுறுத் தியது. ஆல்ை, அவன் சிறிதும் அஞ்சவில்லை.