பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெரியோர் வாழ்விலே திவான், படத்தை எடுத்து வந்தார். படத்தைக் கையில் வாங்கிய விவேகானந்தர், திவானேயும், மற் றும் அங்கிருந்தவர்களையும் பார்த்து, "இதோ இருக்கிறதே படம், இதில் நீங்கள் கா றி த் துப்புங்கள்’ என்ருர். இந்த வார்த்தையைக் கேட்டதும் அவர்கள் திடுக்கிட்டார்கள். 'என்ன சுவாமி, இது எங்கள் அரசரின் படமல்லவா ?’ என்றனர். "இதில் கண்ணுடியும் காகிதமும்தானே இருக் கின்றன ! உங்கள் அரசரா இருக்கிருர் ?” 'அரசர் இதில் இல்லாவிட்டாலும் அரசரின் உருவம் இருக்கிறதல்லவா ?” "ஆம், அரசரின் உருவம்தான் இதில் இருக்கி றது. இந்த உருவத்தின் மூலமாக நீங்கள் உங்கள் அரசருக்கு மரியாதை செலுத்துகிறீர்கள். அதே போலத்தான் காங்களும் இந்த உலகத்தைப் படைத்த ஆண்டவனுக்கு ஒர் உருவத்தின் மூலமாக வணக்கம் செலுத்துகிருேம். இந்தப் படத்தைப் பார்த்து, கண்ணுடியே, காகிதமே என்று நீங்கள் கூறுவதில்லை. அதே போல்தான் க ல் ேல, மண்ணே, தாமிரமே என்று காங்களும் கூறி வணங்குவதில்லை. கடவுளின் உருவங்களாகவே அவற்றைக் கருதி வணங்குகிருேம்’ எ ன் ரு ர் விவேகானந்தர். . இதைக் கேட்டதும் மன்னனின் மனம் மாறியது. விவேகானந்தரிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். 3% డి డి ஒரு சமயம் விவேகானந்தர் ரயிலில் இரண்டாம் வகுப்பிலே பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.