பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான விடைக்குத் தண்டனை பெற்றவர் ! 53. அப்போது விவேகானந்தர், அட பயங் கொள்ளி! அந்த பிரம்ம ராட்சசன் என்னை என்ன தான் செய்கிருன் என்று பார்ப்போமே! இவ்வளவு காட்களாக காம் இங்கு விளையாடிக்கொண்டுதானே இருந்தோம். அந்தக் கிழவர் சொன்னது உண்மை யாக இருந்தால், கம் கழுத்தெல்லாம் எப்போதோ ஒடிந்து போயிருக்க வேண்டுமே!’ என்று கூறி விட்டுச் சிரித்தார். சிரித்துக்கொண்டே மரத்தில் ஏறித் தலை கீழாகத் தொங்கி விளையாடலானுர்! o 夜 * * * 避萝 go ** ஆள்வார் சமஸ்தானத்தில் ஒரு திவான் இருக் தார். அவருக்குச் சுவாமி விவேகானந்தரிடம் அள வற்ற பக்தி. அவர் மாளிகைக்கு ஒருமுறை விவேகா னந்தர் எழுந்தருளி இருந்தார். அ ப் போது, அவரைக் காண ஆள்வார் மகாராஜா வந்தார். வந்தவர் விவேகானந்தருடன் பல செய்திகஆளப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார். அப்போது அவர், “ஏன் சுவாமி, கல்லேயும் மண்ணையும் வைத்துக் கடவுள் என்று மக்கள் வணங்குகிருர்களே ! அது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படி கான் சொல்லுவதால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ ?” என்று சிறிது கிண்டலாகக் கேட்டார். விவேகானந்தர் அதற்கு ஒன்றும் பதில் கூற வில்லை. சிறிது நேரம் சென்றது. விவேகானந்தர் அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்தார். அது அந்த அரசரின் படம். உடனே, அதை எடுத்து வரும்படி திவானிடம் கூறினர். 3609ー4