பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎芝 பெரியோர் வாழ்விலே விளையாடச் செல்வார். கண்டன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு செண்பக மரம் இருந்தது. அதில் விவேகானந்தரும், அந்த கண்பனும் ஏறி விளையாடுவார்கள், விவேகானந்தர் அதன் உச்சியில் ஏறிக் கிளைகளில் கால்கள் இரண்டையும் மாட்டிக்கொண்டு தலை கீழாகத் தொங்குவார்; கிளேக்குத் கிளை தாவுவார்; மேலிருந்து கீழே குதிப் பார்; கீழிருந்து மேலே மள, மள என்று ஏறுவார். இப்படிப்பட்ட சர்க்கஸ் வேலைகளில் அவருக்கு விருப்பம் அதிகம். மரத்தில் ஏறி இப்படிக் குறும்புகள் செய்வது அந்த வீட்டிலிருந்த ஒரு கிழவருக்குப் பிடிக்க வில்லை. அதனுல் அவர், ஒருநாள் விவேகா னக்தரிடமும், அவருடைய கண்பனிடமும் வந்து, "நீங்கள் அந்த மரத்தில் ஏறக்கூடாது. ஏறினுல் ஆபத்துத்தான் அந்த மரத்திலே ஒரு பிரம்ம ராட்சசன் இருக்கிருன். அவன் நள்ளிரவிலே வெள்ளே உடையுடன் இங்கு மங்கும் சுற்றித் திரி கிருன். யாராவது மரத்தில் ஏறினுல், அவன் அவர்கள் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கைலாய த்துக்கு அனுப்பிடுவான். ஜாக்கிரதை' என்று கட்டுக் கதை கட்டிப் பயமுறுத்திவிட்டுப் போளுர், இந்தக் கதையைக் கேட்டதும் அவர்கள் பயந்து விடுவார்கள், அப்புறம் அந்த மரத்துப் பக்கமே தலைகாட்டமாட்டார்கள், என்பது அவர் கினைப்பு. ஆணுல், விவேகானந்தர் இந்த மிரட்டலுக்கெல் லாம் பயப்பட வில்லை. தைரியமாக மரத்தில் ஏறி விளையாடச் சென்ருர், ஆனால், அவருடைய கண் பனுே மிகவும் பயந்தான். விவேகானந்தரையும் விளையாட வேண்டாமென்று கூறித் தடுத்தான்.