பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு ரூபாய் ஊழியர் : 15 வியப்பாகத்தானே இருக்கும்? சிலர் முத்துசாமி அய்யரிடம் இது பெரிய இடத்து விஷயம். உங்களுக்கு இதனால் தீமையே ஏற்படும்” என்று சொன்னார்கள். யாராயிருந்தால் என்ன? குற்றம் செய்தவர் நேரில் வரத்தான் வேண்டும்’ என்று முத்துசாமி அய்யர் பிடிவாதமாகக் கூறிவிட்டார். வெள்ளைக்கார நீதிபதிக்கு வேறு வழியில்லை. நேரில் வந்தார். விசாரணை நடந்தது. கடைசியில், வெள்ளைக்கார நீதிபதி செய்தது குற்றம்தான் என்றும், அதற்காக ரூபாய் மூன்று அபராதம் செலுத்த வேண்டும் என்றும் முத்துசாமி அய்யர் தீர்ப்புக் கூறினார். வெள்ளைக்கார நீதிபதி பேசாமல் அபராதத்தைக் கட்டி விட்டுச் சென்றார். நியாயம் வழங்குவதில் முத்துசாமி அய்யர் மிகவும் நேர்மையானவர்; அத்துடன் அஞ்சாத நெஞ்சமும் கொண்டவர் என்பதை இதனால் அறிய முடிகிறது. ★ ★ ★ முத்துசாமி அய்யருடைய நண்பர் ஒருவர் மற்றொ ருவரிடம் ரூபாய் இருநூறு கடன் வாங்கியிருந்தார். பல நாட்கள் ஆகியும், அவர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர் முத்துசாமி அய்யரின் நண்பர் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு முத்துசாமி அய்யரின் முன்பு விசாரணைக்கு வந்தது. கடன் வாங்கியவர் தமது நண்பர் என்பது முத்து சாமி அய்யருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும்,