பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஒ. பெரியோர் வாழ்விலே பிடவே இல்லை. மனத்தில் நிம்மதியில்லாத போது, அவர் எப்படிச் சாப்பிடுவார்? இந்த விஷயம், ஆஸாத்தின் தந்தைக்குத் தெரிந் தது. உடனே அவர் ஆஸாத்தை அழைத்து, நீ இப்படிச் செய்யலாமா? அவருக்கு என் வயதாகிறதே! என்னைப் போலல்லவா அவரையும் நீ நினைத்து மரியாதையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்? கொஞ்சம்கூட உனக்கு வெட்கமாயில்லை? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!” என்று கோபம் கோபமாகப் பேசினார். உடனே ஆலாத் மிகவும் வருத்தத்துடன் அந்தக் கிழவரிடம் சென்றார். அவரிடம், நான் தெரியாமல் அப்படிச் செய்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ஆனால், அந்தக் கிழவரோ, இல்லை தம்பி, நீங்கள் என் ஆசிரியர். என்னைத் தண்டிக்க உங்க ளுக்கு எல்லாவித உரிமையும் உண்டு. அப்படியிருக் கும் போது, நான் எதற்காக மன்னிப்பது?’ என்று கூறினார். ஆனாலும், ஆஸாத் விடவில்லை. அருகி லேயே இருந்து அவரைக் கட்டாயப்படுத்திச் சாப்பிடச் செய்த பிறகுதான் அந்த இடத்தைவிட்டுச் சென்றார். ★ 赏 ★ ஆஸாத் சிறு வயதிலேயே அரபி, பாரசீகம், உருது முதலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றுவிட்டார். உருதுவில் மிகவும் அழகான பல பாடல்களை இயற்றியிருக்கிறார். பதினான்கு வயதிலேயே அவர் ஒரு நல்ல கவிஞர் என்று பெயர் பெற்றுவிட்டார்.