உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I 8 பெரியபுராணம்- ஒர் ஆய்வு அவற்றில் ஈடுபட்ட அடியார்கள் யாவர்? 'ஆதியை அர்ச்சித்தற் கங்கமும் அங்கங்கே தீதில் திறம்பலவும் செய்வனவும்-வேதியனே நல்வினையே என்றே நமக்கு எளிதானவற்றை மெல்வினையே என்றது. நாம் வேறு. ' எனவே அர்ச்சனை முதலிய செய்தல் மெல்வினை. அஃது ஒரளவு எளிதாம் என்கிறார் இவ்வாசிரியர். மெல்வினை என்பதற்கு இவர் செய்த பொருளின்படி அஃது எளிதாக இருக்கலாம். ஆனால் வன்முறையல்லாத மென்முறை அர்ச்சனை செய்தல், சிவபூசை செய்தல் என்பவற்றுடன் மட்டும் நிற்பதில்லை. பெரியபுராணத்தில் வருபவர் அனைவரும் தொண்டைத் தலைமையாகக் கொண்டவர்களே ஆவர். அவருள் வன்முறை யில் ஈடுபட்டவர் சிலரே. இனித் திருக்களிற்றுப்படியார் கூறியது போல மென்மையான வினைகளில், அதாவது அர்ச்சனை, பூசை என்பவற்றில் மட்டும் ஈடுபட்டவர்கள் பலருண்டு. அரிவாட்டாயர், ஆனாயர், முருகநாயனார், உருத்திர பசுபதியார், திருக்குறிப்புத் தொண்டர், காரைக்காலம்மை, நீலநக்கர், சோமாசிமாறர், சிறப்புலி, கணநாதர், நரசிங்க முனையரையர், அதிபத்தர், காரியார், வாயிலார், புகழ்த்துணையார் என்பவர்கள் பலரும் களிற்றுப்படியார் கூறிய மெல்வினை செய்தமைக்கு உதாரணமாவர். மெல்வினைக்கு முழு எடுத்துக்காட்டாய் இருப்பவர் வாகீசப் பெருந்தகை ஆனால் பெரிய புராண ஆசிரியர் கருத்துப்படி வன்முறைக்கு எதிரான மென்முறைத் தொண்டு செய்தவர்கள் பலருண்டு. களிற்றுப்படியார் கூறும் முறையில் மெல்வினை ஆற்றியவர்கள் அல்லர் இவர்கள். வன்முறையில் ஈடுபட்ட எறிபத்தர், சிறுத்தொண்டர் போன்றார் எத்துணை வீரம் படைத்தவா களோ அதற்குக் கொஞ்சமும் குறையாத வீரம் படைத்தவர் &@TFT off?". 'ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ: என்று திருக் கூட்டச் சிறப்பில் ஆசிரியர் கூறியது இந்தப் பெரு மக்களை மனத்திற் கொண்டேயாம். சிறுத்தொண்டர் எறிபத்தர் போன்றார் வீரம் வெளிப்படையாகத் தெரிவதால் உலகத்தார் நன்றாக அறிவர். ஆனால் திருநாவுக்கரசர்,