பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சேக்கிழாரும் அவர் காலமும் நாம் ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொண்ட பொருள் “சேக்கிழாரும் அவர் மேற்கொண்ட வரலாற்றுச் செய்திகளும் பற்றிய ஆராய்ச்சி” என்பது. இதற்கு முதற்படியாக வேண்டுவது. சேக்கிழார் யார்? அவர் காலம் என்ன? என்பது. இங்கு இதுபற்றி ஆராய்வோம். சேக்கிழார் புராணம் சேக்கிழார் வரலாறு, இப்பொழுதுள்ள பெரிய புராணப் பதிப்புகளின் முதலில் அல்லது ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ள திருத்தொண்டர் புராண வரலாறு அல்லது சேக்கிழார் புராணம் என்பதில் காணப்படுகின்றது. இதுவே சேக்கிழார் வரலாற்றைக் கூறவந்த முதல் நூலாகும். இதனிற் கூறப்படும் சேக்கிழார் வரலாறு இதுவாகும். - ‘தொண்டை நாட்டு 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க்கோட்டத்தில் குன்றை வளநாட்டுக் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் அருள் மொழித்தேவர் என்பவர் பிறந்தார். அவர் தம்பி பெயர் பாலறாவாயர் என்பது. அருள்மொழித் தேவரது புலமைச் சிறப்பு மிகுதிப்பட, அவர் குடிப்பெயரான சேக்கிழார் என்று குறிக்கப்பட்டார். அவரது பெரும்புலமையைக் கேள்வியுற்ற 'அநபாய சோழ வேந்தன்' அவரைத் தனது முதல் அமைச்சராகக் கொண்டான். அவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டம் கொடுத்தான். "சேக்கிழார் சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தில் உள்ள சிவபிரானை வழிபட்டு, அக்கோவிலைப் போன்றதொரு கோவிலைத் தமது குன்றத்துளில் கட்டி, அதற்குத் திருநாகேச்சரம் என்ற பெயரிட்டு மகிழ்ந்தார். "அக்காலத்தில் அரசன் சமணப் பெருங்காவியமாகிய சீவகசிந்தாமணியைப் படிக்கக்கேட்டு மகிழ்ந்தான் அதனைப் பலபடப் பாராட்டினான். அது கண்ட சேக்கிழார், இளவரசனை நோக்கி, ‘சமணர் செய்த அப்பொய்ந் நூல் இம்மைக்கும் பயனில்லை; மறுமைக்கும் பயனில்லை. சிவகதை ஒன்றே இம்மை மறுமைகட்குப் பயனளிக்க வல்லது என்றார். அதுகேட்ட அரசன் ‘அங்ங்னமாயின். அச்சிவகதை ஏது? அது கற்றவர் யார்? அது சீவகசிந்தாமணியைப் போல இடையில் வந்த நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? அதனை இவ்வுலகிற் சொன்னவர் யார்? கேட்டவர்