உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நாயன்மார் வரலாறுகட்குரிய மூலங்கள் இவை (1) திருமுறைகள் (2) கல்வெட்டுக்களிற் கண்ட நூல்கள் (3) பல்லவர்- சோழர் காலத்துப் பிற தமிழ் நூல்கள் (4) சில வடமொழி நூல்கள் (5) சமண-பெளத்த சமயநூல்கள் (6) ஒவியங்கள் (7) சிற்பங்கள் (8) கல்வெட்டுக்கள் 19 செவிவழிச் செய்திகள் என்பன. 1. திருமுறைகள் அப்பர். சம்பந்தர் சுந்தரர் பாடிய முதல் ஏழு திரு முறைகள் இம்மூவருடைய வரலாற்றை ஏறத்தாழ ஒழுங்காக அமைக்கப் பயன்பட்டனவாகும். அவற்றோடு இவற்றில் இம்மூவராலும் குறிக்கப்பட்ட நாயன்மார்களின் பக்திச் சிறப்பினை விளக்கும் அரிய குறிப்புக்கள் பல கூறப்பட்டுள. இவற்றால், ஐந்தாம் பிரிவிற் கூறியவாறு, நாயன்மார்கள் காலங்களை ஒருவாறு அறியலாம். அவர்கள் காலத்துச் சைவ சமய நிலைமை, சமண-பெளத்த சமயங்களின் நிலைமை முதலியன அறியலாம். பல தலங்கள் இன்ன ஆற்றின் கரைமீது அமைந்துள்ளன- தலப் பெயர் இன்னது-கோவிற்பெயர் இன்னது - கோயில்களில் நடைபெற்ற விழாக்கள் இவை - தலச் சிறப்புகள் இவை என்பன போன்ற சேக்கிழார்க்குத் தேவையான குறிப்புக்கள் இத் திருமுறைகளிலிருந்து கிடைக்கின்றன. இவற்றில் சிறப்பாகக் குறிக்கப்பெற்றவர் - கண்ணப்பர், சண்டீசர், கோச்செங்கணான், சாக்கியர், புகழ்த்துணையார், கணம்புல்லர், அரிவாள் தாயர், நமிநந்தி, தண்டியடிகள், மங்கையர்க்கரசியார், நெடுமாறன், குலச்சிறை, கோட்புலி என்பவர். ஏனையோர் யாவரும் பெயரளவிற் குறிக்கப் பெற்றவர். எட்டாம் திருமுறையில் கண்ணப்பர். சண்டீசர் பக்திச் சிறப்பு மட்டுமே தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் திருமுறையில் சண்டீசர், கணம்புல்லர், கண்ணப்பர், அப்பர், சம்பந்தர் பற்றிய குறிப்புக்களும் சேரமானும் சுந்தரும் இருவரும் வெள்ளானைமீது சென்றமையும் தில்லைவாழ் அந்தணர் சிறப்பும் கூறப்பட்டுள. பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் நாயன்மார்கள் பற்றிய குறிப்புக்கள் பல இல்லையாயினும் அதனுட் கூறப்பட்டுள்ள சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவும் கோவில் அமைப்பு முதலிய சமயச் செய்திகளும் விளங்கக் குறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பாடிய திருமூலரே அறுபத்து மூவருள் ஒருவர் ஆதலின்,