உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் வரலாறுகட்குரிய மூலங்கள் 125 மும்மணிக்கோவை (4 சம்பந்தர் திருவுலாமாலை (5) சம்பந்தர் திருக்கலம்பகம் (6) சம்பந்தர் திருத்தொகை என்பன. நம்பி பாடிய இந்த ஆறு நூல்களிலும் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புக்கள் எல்லாம் அடங்கிவிட்டன. இந்த ஆறு நூல்களும் சம்பந்தர் தேவாரமும் கொண்டே சேக்கிழார் சம்பந்தர் புராணம் பெரிதாகப் பாடினார் எனக்கொள்ளலாம். நம்பி தந்த குறிப்புகளுட் குறிப்பிடத் தக்கவை இரண்டு : (1) விடம் மேவி இறந்த பெண்ணைச் சம்பந்தர் எழுப்பினமை (2) சமணர் கழு ஏறிய செய்தி." திரு ஏகாதச மாலை இஃது அப்பரைப் பற்றியது. இதனில் (1) அப்பர் ஆமூரில் பிறந்தமை (2) அவர் தமக்கையர் நல்லுரையால் சைவரானமை 3 சூலை நோய் நீங்கிக் கவிகள் பாடியமை (4 சமணர் அவருக்குச் செய்த தீங்குகள் - கல் மிதந்தமை 15 தேவ நடன் மாதர்க்கு ஈடுபடாது சித்தத்தைச் சிவன்பால் நிறுத்தினமை என்ற முக்கியமான குறிப்புக்கள் காண்கின்றன. நம்பி இவரைப்பற்றிப் பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதியில்: 1 அப்பர் திரு நல்லூரில் திருவடி தீகூைடி பெற்றமை (2) மறைக்கதவு திறக்கப்பாடினமை என்பன குறிக்கப்பட்டுள. இவையும் அப்பருடைய திருமுறைகளும் அப்பர் வரலாற்றைப் பாடச் சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தவையாகும். - கோயில் திருப்பணியர் விருத்தம் இதனில் (1) கண்ணப்பர் பக்திச் சிறப்பு 2 சுந்தரரும் சேரமானும் கயிலை புக்கது 3 சாக்கியர் கல் எறிந்து முத்திபெற்றது (4) அதிபத்தர் வரலாறு 15.கலிக்காமரிடம் 6 வேலிகொண்டு திருப்புன்கூர் கடவுள் மழை பெய்வித்தது என்பன கூறப்பட்டுள்." * 。 திருத்தொண்டர் திருவந்தாதி ... . . . . . - - - -- இது 85 பாக்களை உடையது. இந்நூலில் 63 தனியடியார் 9 தொகை அடியார் வரலாறுகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. சுந்தரர் வரலாறு 15 பாக்களில் குறிக்கப்பட்டுள்ளது. இக் குறிப்புக்களும் சுந்தரர் தேவாரமும் சுந்தரர் வரலாறு பாடச் சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தவையாகும். எல்லா நாயன்மார் வரலாறுகளையும் ஒரளவு தெளிவாக உணர்த்தத் தக்க நூல் இஃதொன்றே. இதுவே பெரிய புராணத்திற்குப் பேருதவி புரிந்த மூலங்களில் சிறப்புடையதாகும். -- = . . . . . . . . . . 2. கல்வெட்டுக்களில் கண்ட நூல்கள் Gಆಹápiಹತ್ರ ستبقون சோழர் காலத்தில் தோன்றிய நூல்கள் சில கல்வெட்டுக்களிற் காண்கின்றன. அவை சமயத் தொடர்புடையன ஆதலின் அவற்றைச் சேக்கிழார் படித்திருக்கலாம். அவற்றைக் கீழே காண்க