உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் வரலாறுகட்குரிய மூலங்கள் 127 பெரிய புராணத்துள் வரும் அப்பர் வரலாற்றில் கூறப்பட்டுள்ள இக் குறிப்புக்கட்குரிய மூலம் திருமுறை நூல்களிற் போதிய அளவு இல்லாமையை நோக்க, உண்மை புலனாகும். நமது ஊகம் சரியாக இருப்பின் இவ்விரு நூல்களும் சேக்கிழார்க்குப் பயன்பட்டன என்னலாம். நீடுளில் புராண மாளிகை இங்ங்னம் எத்துணைப் புராணங்கள் எல்வெத் தலங்களைப் பற்றியனவாக இருந்தனவோ, தெரியவில்லை. முதற் குலோத்துங்கன் ஆட்சியில் நீடுரில் சொன்னவாறு அறிவார் கழறிற்றறிவார் என்ற சேரமான் பெருமான்? என்பவர்க்குக் கோவிலும் அதனுள் புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகையும் கட்டப்பட்டன என்று கல்வெட்டுக் குறிக்கிறது." இதனால் சேக்கிழார்க்கு முன்பே சைவசமயத் தொடர்பான புராணங்கள் சில இருந்தன. அவை கோவில் மண்டபங்களிற் படித்து விளக்கப்பட்டன என்ற செய்தி ஐயமற விளங்குதல் காணலாம். 3. பல்லவர் - சோழர் காலத்துப் பிற தமிழ் நூல்கள் நந்திக் கலம்பகம் . . பல்லவர் காலத்துத் தமிழ் நூல்களில் நமக்கு வேண்டுவதும் இன்று அழியாதிருப்பதும் நந்திக்கலம்பகமே ஆகும். இது கழற்சிங்க நாயனார் என்று கருதப்படும் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றியது. இது (1) நந்திவர்மனுடைய நல்லியல்புகள் (2) சிவபக்தி (3) தமிழ்ப்புலமை (4) போர்த்திறன் (5)பேரரசுத்தன்மை (6) அவனது வடபுலப்போர் (7) தெள்ளாற்றுப் போர் முதலியவற்றை நன்றாகக் கூறுகிறது. இந்நூலைச் சேக்கிழார் நன்கு பயன்படுத்தினவர் என்பது மூன்றாம் பிரிவில் முன்னமேயே காட்டப்பட்டது : பத்தாம் பிரிவிலும் காட்டப்படும் ஆண்டுக் காண்க சிதைந்த பாக்கள் . x - - - யாப்பருங்கல விருத்தியுரையில் (11ஆம் நூற்றாண்டு உள்ள சில பாக்கள் இந்நந்திவர்மனைப் பற்றியனவாகக் காண்கின்றன." அவற்றில் இவனுடைய வீரம், ஈகை, தமிழ்ப்புலமை முதலியன நன்கு பாராட்டப்பட்டுள. இவை எந்நூலைச் சேர்ந்தவையோ தெரியவில்லை. அந்நூல் சேக்கிழார் காலத்தில், நன்னிலையில் இருந்திருத்தல் கூடியதே. தில்லை உலா - - இஃது இன்றளவும் அச்சேறாதது சிதைந்த நிலையில் இதனைத் தமிழ்ப்பொழிலில்" வெளியிட்டவர் பண்டிதர் உலகநாதப் பிள்ளை, தில்லைப்பிரான் உலாப்போகையில் திருநீற்றுச்சோழன் பரிமீது முன் சென்றதாக