உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் வரலாறுகட்குரிய மூலங்கள் 129 4. வடமொழி நூல்கள் மத்த விலாசம் இஃது அப்பர் காலத்து அரசனான மகேந்திரவர்மன் செய்த வேடிக்கை நாடகம் இதனில் இசை நடனம் பாராட்டப்பட்டுள. பெளத்தர், காபாலிகர், பாசுபதர், சமணர் நிலைகள் கூறப்பட்டுள. உயர்நீதி மன்றத்து நீதிபதிகள் லஞ்சம் பெறத்தக்கவர் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுளது. இங்ங்ணம் மகேந்திரனே தன் ஆட்சிக்குட்பட்ட நீதிபதிகளைப் பற்றிக் கூறுதல் கவனிக்கத்தக்கது." இந்நூல் அப்பர் காலத்துச் சமயவுலகைப் படம் பிடித்துக் காட்டலால் இதனைச் சேக்கிழார் கவனித்திருக்கலாம் என்பது தவறாகாது. இஃது அடுத்த பிரிவில் விளக்கம் பெறும். அவந்தி சுந்தரீ கதா இஃது இராசசிம்மன் (கி.பி. 685-720 காலத்தில் அவன் அவைப்புலவரான தண்டி என்பவரால் வடமொழியிற் செய்யப்பட்டது. இதன் முகவுரையில் பல்லவ அரசர் வடமொழிப்புலமையும் அவராற் போற்றப்பட்ட வடமொழிப்புலவரும் அவர் பற்றிய செய்திகளும் குறிக்கப்பட்டுள்ளன.” இராசசிங்கன் காலத்தில் உண்டான கொடிய பஞ்சம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இராசசிங்கன் நல்லியல்புகள் குறிக்கப்பட்டுள." இந்த இராசசிங்கன் பூசலார் வரலாற்றிற் குறிக்கப்பட்ட காடவர் கோமான்’ என்று அறிஞர் கருதுகின்றன்ர்." அஃதாயின், இந்நூல் அவனைப்பற்றிய சில குறிப்புக்களைச் சேக்கிழார்க்கு உதவி இருக்கலாம். - - - 5. சமண-பெளத்த சமய நூல்கள் சம்பந்தர் மதுரையிற் சமணரோடும் போதி மங்கையிற் பெளத்தரோடும் வாதிட்டார் என்று சேக்கிழார் கூறி, அச்சமயக் கொள்கைகளை மிக நுணுக்கமாக விளக்கிக் கூறியுள்ளார்." அதனால் இவர் பொதுவாக மணிமேகலை, வளையாபதி போன்ற பெளத்த நூல்களையும், சிந்தாமணி, நீலகேசி போன்ற சமண நூல்களையும் படித்திருக்கலாம். சிறப்பாகத் தம் காலத்துச் சமணப் பெரியார்களையும் பெளத்தர்களையும் நேரிற்கண்டு அவர்தம் சமயக் கொள்கைகள் பற்றிய நுணுக்கங்களைக் கேட்டறிந்தும் இருக்கலாம். இங்ங்னம் சேக்கிழார் விசாரிக்கத்தக்க நிலையில் சோழர் காலத்தில் சமணமும் பெளத்தமும் இருந்தனவா?எனின், அவை நன்னிலையில் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் உணர்த்துகின்றன. அவ்விவரம் கீழே காண்க. . சோழர் காலத்துச் சமணம் (1) கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வட ஆர்க்காட்டுக்