உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெரியபுராண ஆராய்ச்சி கோட்டம் வெடால் என்ற ஊரில் பெரிய சமணப் பள்ளியும் பாழியும் இருந்தன. அங்கு 400க்கு மேற்பட்ட குரத்தியர் சமணப் பெண் துறவிகள்) இருந்தனர்" (2 கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்துச் சிற்றாமூரில் இருந்த சமணப் பள்ளியில் சமண சமயநூல் படித்து விளக்கப்பட்டது" (3 முதற் பராந்தகன் காலத்தில் செங்கற்பட்டுக் கோட்டத்து ஆனந்த மங்கலத்தில் ஜினகிரிப்பள்ளி என்ற பெயருடன் ஒரு பள்ளி இருந்தது.” (4 அதே காலத்தில் திருப்பான்மலை என்ற இடத்திற் சமணர் பலர் குடியிருந்தனர். அவர்கட்குக் குருவாக இருந்தவர் அரிஷ்டநேமிபட்டாரர் என்பவர். அவர் மாணவியாரான பத்தினிக்குரத்தி அடிகள் விளாப்பாக்கம்’ என்ற சிற்றுரில் சமணப் பெண் துறவிகள் மடம் ஒன்று அமைத்தார்" (5) முதல் இராசராசன் காலத்தில் திருநறுங் கொண்டை, திருமழபாடி, திருமலை, குஹ9ர், தாதாபுரம் முதலிய ஊர்களில் சமணப் பள்ளிகள் இருந்தன" (6) காஞ்சி நகரின் ஒரு பகுதியான திருப்பருத்திக்குன்றம் “ஜின காஞ்சி' எனப் பெயர்பெற்றது. அங்குக் குலோத்துங்கன் காலத்தில் சமணத் துறவிமார் 'ரிஷி சமுதாயம் என்ற பெயரால் இருந்து வந்தனர். ' அச்சமுதாயம் விக்கிரம சோழன் காலத்திலும் இருந்தது." சேக்கிழார்க்குப் பிற்பட்ட காலத்தும் இருந்தது." சோழர் காலத்துப் பெளத்தம் நாகப்பட்டினம் பல்லவர் காலத்திற் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. அங்கு இராசசிங்கன் பெளத்த விஹாரம் ஒன்றைச் சீனர் (பெளத்த வாணிகர் தொழுகைக்காகக் கட்டினான் என்று சீன நூல் கூறுகிறது." அத்தகைய கோவில் ஒன்று இராசராசன் , இராசேந்திரன் 1, குலோத்துங்கன் 1 இவர்களால் சிறப்பிக்கப் பெற்றது." எனவே, அப்பெளத்த விஹாரம் நம் சேக்கிழார் காலத்தில் நன்னிலையில் இருந்ததென்னலாம். சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் அச்சீன வணிகருடன் அளவளாவி இருத்தல் கூடியதே என்க. சென்ற பகுதியிற் குறித்த சோழர் கால ஓவியங்களும் சிற்பங்களும் சேக்கிழாருக்கு எங்ங்ணம் பயன்பட்டன என்பது அடுத்த பிரிவிற் குறிக்கப்படும். அவர் கல்வெட்டுக்களைப் பார்த்திருக்கலாம் என்பது பத்தாம் பிரிவில் விளக்கப்பெறும் முன்னூல்களில் இல்லாத கதைக் குறிப்புக்கள் பலவற்றைச் சேக்கிழார் கூறலைக் காண, அவை கர்ண பரம்பரைச் செய்திகளாக இருத்தல் கூடும் என்பதை நம்பலாம். சேக்கிழார் இக்குறிப்புக்களை எங்ங்ணம் தொகுத்தார் என்பது அடுத்த பிரிவிற் கூறப்படும்.