உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் - 137 சேக்கிழார் சோதனை தொகை - அந்தாதிக்குள்ள வேறுபாடுகள்: சுந்தரர் தமது தொகையில் விளக்கமாக நாயன்மாரைப் பற்றிக் கூறாவிடினம், சிலருடைய சிறப்புடையச் செயல்களைச் சில சொற்களால் குறித்துச் சென்றுள்ளார். இந்த நுட்பத்தை நம்பி பல இடங்களில் விளக்கவில்லை. சான்றாகச் சில காண்க 1. சுந்தரர் குறித்த ஆர்கொண்ட வேல் கூற்றன் களந்தைக்கோன்' என்ற தொடரில் உள்ள 'ஆர்கொண்ட' என்பது சிறப்புத் தொடராகும். இஃது ஆத்திமாலையைக் கொண்ட' என்று பொருள்படும். "இக்களந்தைக்கோன் 'கூற்றுவன்' என்ற பெயருடைய களப்பாளன். இவன் இறைவன் திருவடியை முடியாகப் பெற்று உலகாண்டவன்" என்று நம்பி குறித்தார். இவ்விரண்டு கூற்றுகளையும் ஆராய்ந்த சேக்கிழார், "ஆர் உரிமையாற் கொண்டவர் சோழர் ஆயின் கூற்றுவர் களப்பாளர் எனப்படலால், சோழர் ஆகார் சோழர் ஆகாமையால் அவர் 'ஆர் (வலிதிற் கொண்டவர் ஆவர் : அஃதாவது சோழநாட்டை வென்றவராவார். அதனாற்றான். மன்னர்க்குரிய முடி தில்லை வாழ் அந்தணரால் சூட்டப்பெற்றிலர்" என்ற உண்மையை உணரலாயினர் : அத்துடன் அவர் நிற்கவில்லை தம் காலத்துத் தில்லைவாழ் அந்தணரை இவ்வரலாறு பற்றிக் கேட்டு, அதன்பிறகே, "கூற்றுவர்க்கு முடிசூட்ட மறுத்த தில்லை வாழ் அந்தணர் அவர்க்கு அஞ்சி ஒருவரைத் தில்லையிற் பூசைக்கென விடுத்து எஞ்சியோர் சேரநாடு புக்கனர்" எனத் தம் புராணத்துக் கூறுவராயினர். சேக்கிழார் தில்லையில் நூல் செய்தார் ஆதலாலும் தில்லைவாழ் அந்தணர் பற்றிய செய்தி அவர் மரபினரைக் கேட்டே எழுதுதல் முறையாதலாலும் இம்முறையைக் கையாண்டிருக்கலாம் என்பது பொருத்தமேயாகும். 2. சுந்தரர், புகழ்ச்சோழர்க்குக் கருவூர்த் துஞ்சிய என்ற அடையைச் சிறப்புடையதாக்கிக் கூறியுள்ளார். ஆயின் நம்பி இதுபற்றி ஒன்றுமே கூறவில்லை. இக்குறையைக் கவனித்த சேக்கிழார் தாம் பாடிய புகழ்ச் சோழர் புராணத்தில் அவர் கருவூர்த் துஞ்சிய செயலையே பெரிதும் பேசியுள்ளார். 3. சுந்தரர் நெடுமாறனை, நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற என்ற தொடரால் சிறப்பித்துள்ளார். நம்பி இதுப்பற்றி விளக்கம் கூறவில்லை, இஃதறிந்த சேக்கிழார், நெடுமாறன் புராணத்தில் நெல்வேலிப் போர் ஒன்றையே சிறப்பித்துப் பேசியுள்ளார். - 4. சுந்தரர் கோட்புலியாரை, அடல்சூழ்ந்த வேல் நம்பி என்ற தொடராற் சிறப்பித்தனர். நம்பி இதுபற்றி ஒன்றுமே கூறவில்லை. சேக்கிழார் இதனைக் கோட்புலியார் புராணத்தின் முற்பகுதியில் நன்கு விளக்கியுள்ளார்.