உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பெரியபுராண ஆராய்ச்சி 5. பல்லவர் இருவர் - 1 ஐயடிகள் காடவர்கோன் (2 கழற்சிங்கர் 6. களப்பிரர் ஒருவர் கூற்றுவ நாயனார் 7. சிற்றரசர் நால்வர் - (1) மெய்ப்பொருள் நாயனார் (2 இடங்கழியார் (3) நரசிங்கமுனையரையர் (4) பெருமிழலைக் குறும்பர் 8. பல்லவர் படைத்தலைவர் - பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர் 9. சோழர் படைத்தலைவர் மூவர் - கோட்புலியார் 2 கலிக்காமர் (3) மானக்கஞ்சாறர் - 10. பாண்டியர் அமைச்சர் - குலச்சிறையார் இங்ங்னம் 63 நாயன்மாருள் அரசியல் தொடர்புடையார் 17 பேர் ஆவர். இந் நாயன்மாரைப் பற்றித் தொகை - அந்தாதி - தேவாரம் இவற்றிற் கிடைத்த குறிப்புகள் இவர்தம் வரலாறுகளை ஒன்றாகக் கூறப் போதியன அல்ல, ஆதலின் சேக்கிழார் பல புதிய குறிப்புக்கள் தேட வேண்டியவரானார். வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகள் இயன்றவரை உண்மையாக இருக்கும் படி கூறுவதே தமது முதல் அமைச்சர் பதவிக்குத் தக்கது என்ற எண்ணமுடையவர் சேக்கிழார் என்பது அவரது பேருழைப்பால் நன்கு தெரிகிறது. அவர் பிற நாயன்மார் வரலாற்று உண்மைகளையும் ஆராயப் புகுந்தபொழுது கீழ்வரும் புதிய அரசர்களைப் பற்றியும் அறியவேண்டியவரானார். - - - - - 1. அப்பர் வரலாற்றிற் குறிக்கப்படும் மகேந்திரவர்மன் என்ற பல்லவன் 2. பூசலார் வரலாற்றிற் குறிக்கப்படும் இராசசிங்கன் என்ற பல்லவன் 3. தண்டியார் வரலாற்றிற் குறிக்கப்படும் சோழ அரசன் 4. அப்பர் குங்குலியக்கலயர் வரலாறுகளில் குறிக்கப்படும் சோழ அரசன் - 5 சுந்தரர் காலத்தில் பாண்டியனுடன் இருந்த சோழ அரசன் தமக்கு ஏறத்தாழ 250 ஆண்டுமுதல் 700 ஆண்டு alಣT (450 வருட காலம் உள்ள பரந்துபட்ட காலத்தில் இருந்த நாயன்மார் வரலாறுகளைக் கூறவேண்டிய நிலைமை உண்டாதலால், பொறுப்புணர்ச்சியுடைய அப் பெரும் புலவர் தமக்கு முற்பட எழுந்த மூலங்களை நுணுக்கமாக ஆராயத் தொடங்கினார். அங்ங்ணம் ஆராய்ந்தபொழுது தொகைக்கு அந்திாதிக்குமே சில வேறுபாடுகள் இருப்பதைக் கண்டார். அவற்றுட் சிறந்தன. கீழ்வருவன: