உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் 135 5. காரியார் சிவனைப்பாடிக் கயிலை புக்கவர் என்பது நம்பி கூற்று. அவர் மூவேந்தர்மீது கோவை பாடிப் பெற்ற பொருளைக் கொண்டு சிவன் கோவில் கட்டி முக்தி பெற்றவர் என்பது சேக்கிழார் கூற்று. 6. சுந்தரர் செருத்துணை நாயனாரைத் ’தஞ்சை மன்னவன்' என்று குறித்தார். சேக்கிழார் அவரை 'வேளாண்குல முதல்வர்' என்று மாற்றிக் கூறியுள்ளனர். - இவ் வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? பெரிய புராணம் பாடிய சேக்கிழார் 63 நாயன்மார் காலத்தவர் அல்லர் ; இந் நாயன்மார் வரலாறுகளை விளக்கமாகக் கூறும் முதல் நூல்களைப் பெற்றவரும் அல்லர் நாயன்மார் பெயர்களைக் கூறும் அளவில் சுந்தரர் பாடிய தொகையும், அதனினும் ஓரளவு விளக்கம் பெற்ற நம்பி செய்த அந்தாதியும் மூவர் அருளிய திருமுறைகளும் கர்ண பரம்பரை வரலாறுகளுமே இவர்க்குச் சிறப்புடைய மூலங்களாகும். மூவர் பாக்களில் நாயன்மார் சிலருடைய சிவப்பணிகள் பாராட்டப்பட்டுள்ளனவே தவிர, அவர்தம் நாடு, ஊர், மரபு முதலியன தெளிவாக உணருமாறு இல்லை. நாயன்மாருள் அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்டார் பலர் சுந்தரர்க்கு முற்பட்டார் மிகப்பலர். இந்த நிலையில் தாம் தாம் கேள்வியுற்ற அளவே அந் நாயன்மார் வரலாறுகள் மூவராலும் குறிக்கப் பெற்றன. அந்தாதி பாடிய நம்பி நிலை பின்னும் இரங்கத் தக்கதாகும். அவர் சுந்தரர்க்கு ஏறத்தாழ 125 ஆண்டுகள் பிற்பட்டவர். ஆதலின், அவர் மூவர் தேவாரம், தொகை, தம் காலத்து வழங்கிய கதைகள் இவற்றை உளம்கொண்டு அவரால் முடிந்தவரை திருத் தொண்டர் திரு அந்தாதி பாடி முடித்தார். இங்ங்ணம் வந்த மூலங்களைக் கொண்டு, நம்பிக்கு ஏறத்தாழ 100 ஆண்டுகட்குப் பின் வந்த நம் சேக்கிழார் பெருமான் பெரியதோர் காவியம் பாடுவதெனின், அஃது எளிதில் இயலும் செயலாமோ? சேக்கிழார் பொறுப்புணர்ச்சி சேக்கிழார் சோழப் பேரரசின் முதல் அமைச்சராதலின், அப்பதவிக்கு உரிய அரசியல் அறிவு நிரம்பப் பெற்றவர் என்று நினைத்தல் தகும். அவர் அந்த அரசியற்கண் கொண்டு 63 நாயன்மாரைப் பற்றிய சுந்தரர் - நம்பி தந்துள்ள குறிப்புக்களை ஆராய்ந்தார் கீழ்வரும் விவரங்களைக் கண்டார். 63 நாயன்மாருள், 1. சேரர் ஒருவர் - சேரமான் பெருமாள் சோழர் இருவர் - கோச்செங்கணான் (2) புகழ்ச் சோழர் பாண்டியர் ஒருவர் - நெடுமாறன் அவர் மனைவியாரும் சோழன் மகளாருமான மங்கையர்க்கரசியார்