உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெரியபுராண ஆராய்ச்சி 10. 11 12. 箕3。 ஐயடிகள் வெண்பாப் பாடுதற்கு முற்பட்ட வரலாறு கழற்சிங்கன் வடபுலப் போர் - கோவில் தொண்டு செய்தமை கோட்புலியார் போர்மீது சென்ற விவரம் கற்றளி கட்டிய காடவர்கோன் கனவு - அவன் பூசலாரைச் சந்தித்தமை சுந்தரரும் நம்பியும் கூறாதுவிட்ட நாயன்மார் வாழ்ந்த பதிகள், அப்பதிகளைக் கொண்ட நாடுகள், அவ்விருவரும் குறியாது விட்ட நாயன்மார் மரபுகள் முதலியன. - 2. சேக்கிழாரால் விளக்கப்பட்ட குறிப்புக்கள் 1. 2. 7. 8. திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு மெய்ப்பொருள் நாயனார் பொய்த் தவவேடங் கொண்ட பகைவனால் ஏமாற்றிக் குத்தப்பட்டமை சுந்தரர்-பரவையார் திருமணம் ; விறல்மிண்டர் இடையீட்டால் திருத்தொண்டத் தொகை பாடினமை நந்தனார் முனிவராதற்கு முன் செய்த தொண்டுகள் சாக்கியர் காஞ்சியில் சிவனை வழிபட்டு முத்தி அடைந்தமை கூற்றுவ நாயனார் சிவனுடைய திருவடியையே முடியாகக் கொண்டமைக்கு உரிய காரணம் நெல்வேலிப் போர் போதி மங்கையில் நடந்த சைவ-பெளத்த வாதம் 3. சேக்கிழார் மாற்றிக் கூறியவை 1. அமர்நீதி நாயனாரும் அவர் மனைவியாரும் அடியாரது கோவணத் துணிக்கு ஈடாகத் துலைபுக்கனர் என்று நம்பி குறித்தனர் ஆயின், சேக்கிழார் அமர்நீதி நாயனார், அவருடைய மனைவியார், அவர்கள் மகனான சிறுவன் ஆக மூவரும் துலைபுக்கனர் என்று கூறியுள்ளார். சம்பந்தர் விடமேறிய பெண்ணை எழுப்பினார் என்று நம்பி குறித்தார். ஆயின், சேக்கிழார் எலும்பைப் பெண்ணாக்கியதாகக் குறித்துள்ளார். மூர்க்க நாயனார் திருவேற்காட்டுர் மன்னர் என்று நம்பி குறித்தார். சேக்கிழார் அவரை 'வேளாண்குல முதல்வர்' என்றனர். சங்கப் புலவர் 49 பேரே பொய்யடிமை இல்லாத புலவர் என்பது நம்பி கூற்று. 'சங்கப் புலவர்' என்ற தொடரே சேக்கிழார் காட்டவில்லை. அவர் கூற்றை உற்று நோக்கின், பொய்யடிமை இல்லாத புலவர் ஒருவரோ என்று ஐயுற வேண்டுவதாகவுள்ளது.