உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - பெரியபுராண ஆராய்ச்சி கூறினான் என்று சேக்கிழார் கூறிய கூற்றுத் தக்க சான்று கொண்டே கூறியதாகலாம் என்பது மத்த விலாசத்தால் உறுதிப் படுகிறதன்றோ? நான்காம் காரணம் : சேக்கிழார் சோழப் பேரரசனது முதல் அமைச்சர் ஆதலின், அவர் தமது அலுவல் முறையில் சோழப் பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்த்தவராகலாம். அத்துடன், அவருக்கு இயல்பாக இருந்த சைவப் பற்றினாலும் நாயன்மார் வாழ்க்கைக் குறிப்புக்களை அறியவேண்டும் என்ற ஆர்வத்தாலும் அந் நாயன்மார் வாழ்ந்த பதிகளையும், அவர்கள் வழிபட்ட கோயில்களையும் தரிசித்திருக்கலாம். அங்ங்னம் யாத்திரை செய்த பொழுது அங்கங்கு வழங்கிய நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுத்திருக்கலாம். இங்ங்னம் சேக்கிழார் சோழப் பெருநாட்டில் யாத்திரை செய்தனராதல் வேண்டும் என்பதை வலியுறுத்தத் தக்க சான்றுகள் பல பெரிய புராணத்தில் உண்டு. அவற்றுட் சில ஈண்டுக் காட்டுதும். 1. கண்ணப்பர் வரலாற்றைக் கூறிய நக்கீரர், பரணர், நம்பி முதலியோர் குறியாத பொத்தப்பி நாட்டுச் சிறப்பு, உடுப்பூர்ச் சிறப்பு. உடுப்பூருக்கும் காளத்திக்கும் இடைப்பட்ட காட்டு நிலை, கண்ணப்பர் உடுப்பூரிலிருந்து வேட்டையாடிக் கொண்டே காளத்தி வந்தமை, காளத்தி மலை வருணனை முதலியவற்றை நடுவு நிலையிலிருந்து கவனிப்பார்க்குச் சேக்கிழார் அவ்விடங்களை நேரே சென்று கண்டவராவர். அங்குக் கண்ணப்பரைப் பற்றிய செய்திகளை விசாரித்து அறிந்தவராவர் என்பன நன்கு விளங்கும். சேக்கிழார் காலத்தில் பொத்தப்பி நாட்டை ஆண்டவன் மதுராந்தக பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன். இம்மரபினர் காளத்தி கோவிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள் மிகப்பல என்பதைக் காளத்திக் கல்வெட்டுக்களால் அறியலாம். இச்சிற்றரசர் துண்ணகொண்டு சேக்கிழார் உடுப்பூர் முதலிய இடங்களைப் பார்வையிட்டனர் எனக் கொள்வதும் பொருந்தும். சேக்கிழார் கூறியுள்ள நாட்டுச் சிறப்பு முதலியன இன்றளவும் ஒத்திருத்தல் கவனிக்கத்தக்கது." - - -- - 2. அப்பரது தொண்டை நாட்டு யாத்திரையைக் கூறுமிடத்து 'அப்பர் திருவாலங்காடு பணிந்தார் , பிறகு பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் கடந்து காரிக்கரை அடைந்தார்" என்று சேக்கிழார் கூறல் நோக்கத்தக்கது.' திருவாலங்காட்டிற்கும் காரிக்கரைக்கும் இடையில் மலைகளும் காடுகளும், அவற்றை அடுத்து ஊர்களும் இருத்தலை இன்னும் காணலாம். காரிக்கரை, இன்று இராமகிரி என்ற பெயருடன் இராமகிரி மலை அடி வாரத்தில் உள்ள சிற்றுர் ஆகும். இங்ங்ணம் அப்பர் சென்ற யாத்திரை வழியைக் குறித்துச் சேக்கிழர் கூறியுள்ள குறிப்புக்கள் (செ341-343) சரியானவை என்பதை அறிஞர் ஒப்புகின்றனர்." - - - 3. சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டை நாட்டு நிலப் பகுதிகள், அவற்றின் இயல்பு அந்நிலப் பகுதிகளில் உள்ள