உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் 14] சிறப்புடைத் தலங்கள், அத்தலங்களைப் பற்றிய சிறப்புக்கள் முதலியவற்றை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் திணை மயக்கம் பெற்ற பதிகளையும் நன்றாக விளக்கியுள்ளார். இவற்றை ஊன்றிக் காண, இப்புலவர் பெருமான் தொண்டை நாடு முழுவதும் நன்றாகச் சுற்றிப் பார்த்தவர் என்பது உறுதிப்படும். 4. அப்பர், சம்பந்தர், சுந்தரர் தம் தல யாத்திரைகளைப் பற்றிக் கூறுங்கால், இவர் இன்ன கோவிலைப் பணிந்த பிறகு இன்ன கோவிலுக்குச் சென்று பதிகம் பாடினார்; பிறகு இன்னின்ன கோவில்களைத் தரிசித்து இன்ன பதியை அடைந்தார் என்று சேக்கிழார் கொடுக்கும் இடங்கள் பல உண்டு. அம் முறைவைப்பு ஏறக்குறைய ஒழுங்காக இருத்தல் படங்கள் " கொண்டு உணரலாம், சான்றாக நான் கண்ட ஒன்றைக் கூறுவேன். தலையாலங்காடு என்பது திருவாரூர்க்கு வடக்கே கேல் தொலைவில் உள்ளது. அங்கிருந்து திருவாரூர்க்கு வரும் வழியில் () தலையாலங்காடு 2 பெருவேளுர் 3 சாத்தங்குடி (4) கரவீரம் 5 விளமர் என்ற ஐந்து தலங்கள் முறையே உள்ளன." சேக்கிழார் சம்பந்தரது யாத்திரையில் இம்முறை பிறழாது கூறியிருத்தல் காணத் தக்கது." - 5. அப்பர் தமது யாத்திரையில் சில முக்கியமான தலங்களில் தங்கி (as headquarters) அங்கிருந்த சுற்றுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு. மீட்டும் தாம் தங்கிய தலங்கட்கு வந்து சேர்ந்தனர் என்று சேக்கிழார் குறித்துள்ளார். அவர் அங்ங்ணம் குறித்த ஒவ்வொரு முக்கியமான தலமும் அதனைச் சூழவுள்ள தலங்களும் அவர் கூறியவாறே இன்றும் இருத்தல் கண்டு இன்பப்படுதற்குரியது." இவ்வாறே சம்பந்தர், சுந்தரர் புராணங்களிலும் La garăsit(as head quarters) ia pe t: 9ditaran. . - 6. சம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து மதுரை சென்ற வழியைக் கூறுதல்" முற்றும் பொருத்தமானது. இங்ங்னமே அவரது பாண்டிய நாட்டு யாத்திரையும் ஒழுங்காகக் கூறப்பட்டுள்ளது. சிவத் தலயாத்திரைப்படங்களின்" உதவிகொண்டு உணரத்தக்கது. - - - - 7 சம்பந்தர் பாண்டி நாட்டிலிருந்து மீண்டு வருகையில் திருக்களர் பாதாளிச்சரம் இவற்றைப் பணிந்து முள்ளி யாற்றங்கரை அடைந்தார் . பின் அக்கரை சென்று கொள்ளம்பூதுரை அடைந்தார்" என்று சேக்கிழார் குறித்தமை நோக்கத்தக்து. இவை முறையே தெற்கிலிருந்து வடக்கில் உள்ள சோணாட்டுத் தலங்களாகும். இம்முறை பிறழாமல் சேக்கிழார் கூறலே கூர்ந்து கவனிக்கத்தக்கது. . . . . . - . . 8. கொள்ளம்பூதூர் பணிந்த சம்பந்தர் பல தளிகளைப் பணிந்து திருநள்ளாறு சென்றார் . பின் தெளிச்சேரி பணிந்தார். அங்கிருந்து திருக்கடவூர் செல்கையில் வழியில் போதி மங்கை குறுக்கிட்டது. அது புத்தர் வாழ்ப்தியாகும். அங்குச் சம்பந்தர் அவர்களுடன் ஒரு மண்டபத்தில் தங்கி