பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரும் அவர் காலமும் 15 ஒன்பதாம் திருமுறையில் இராசராசற்கு எதிரில் சேர்த்தார் என்பது மகன் தனது ஆட்சிக் காலத்திற் கட்டிய கோவிலைப் பற்றிய பாடல் ஒன்றை, அம்மகனுடைய தந்தை காலத்துப் புலவர் அத்தந்தை முன்னிலையிலேயே, மற்றத் திருமுறைகளை வகுத்தபொழுதே, தொகுத்தார் என்னல் எங்ங்னம் பொருந்தும்?” - இங்ங்னம் இராசராசன் காலத்தவரும் பிற்பட்டவருமான புலவர் பாக்களை எல்லாம் இராசராசன் காலத்திலேயே நம்பி தொகுத்து முடித்தார் என்று திருமுறை கண்ட புராண ஆசிரியர் தவறாகக் கூறிவிட்டதால்." ஆராய்ச்சியாளர், 'திருமுறைகள் முதற் குலோத்துங்கன் காலத்தில் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும்' என்றும், நம்பி, திருவிசைப்பாவையும் தொகுத்தார்’ என்று புராணம் கூறலால் அவர் இராசராசற்குப் பிற்பட்டவர்" என்றும் கருதலாயினர். இவற்றின் ஆசிரியர் உமாபதிசிவமா? திருத்தொண்டர் புராண வரலாறும் திருமறை கண்ட புராணமும் இயற்றியவர் சந்தான ஆசாரியருள் ஒருவரும், சைவசித்தாந்த நூல்கள் பலவற்றின் ஆசிரியருமான கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் என்று சில பதிப்புகளிற் காண்கின்றன. அவர் பாடியனவாகத் திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிக்கோவை என்பனவும் காணப்படுகின்றன. இவற்றுள் முன்னது பெரிய புராணத்தைத் தழுவிச் செய்யப்பட்டதாகும். அதனில் (1) 'இடங்கழியார் கொடும்பாளுர் வேளிர்குலத்தரசர்’ என்றும், (2) கழற்சிங்கனும் ஐயடிகள் காடவர்கோனும் பேரரசர் என்றும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன.' இதனைப் பாடிய உமாபதிசிவமே இச்செய்திகளையே தவறாகக் கூறும் சேக்கிழார் புராண வரலாற்றையும் பாடினார் என்பது எங்ங்ணம் பொருந்தும்? 'திருத்தொண்டர் புராண வரலாறும் திருமுறை கண்ட புராணமும் உமாபதிசிவம் பாடினார் எனக் கூறுதல் மரபு' என்று சமாஜப் பதிப்புக் குறித்துள்ளது. இவற்றை உமாபதிசிவம் பாடினார் என்று கூறும் தனிப்பாட்டு சில பிரதிகளில் இல்லை' என்று திரு. வி. கலியாணசுந்தர முதலியார் பதிப்புக் குறித்துள்ளது. இவற்றை நோக்க உமாபதி சிவாசாரியார் திருத்தொண்டர் புராணசாரம் முதலிய மூன்று நூல்களைச் செய்தவராகலாம் எனக் கோடல் தவறாகாது. உமாபதிசிவனார் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். ஆயின், திருத்தொண்டர் புராண வரலாறும், திருமுறை கண்ட புராணமும் செய்த ஆசிரியர் இன்னவர் என்பதோ, அவர்காலம் இன்னது என்பதோ திட்டமாகக் கூறுதற்கில்லை. ஆயினும், அவற்றுள் இராசராசன், அநபாயன் என்ற அரசர் பெயர்களும், கல்வெட்டுகளோடு ஒன்றுபடும் சேக்கிழார் பற்றிய குறிப்புகள்