பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெரியபுராண ஆராய்ச்சி சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தவர் என்பதற்குப் பெரிய புராணத்திலிருந்து பல சான்றுகள் காட்டலாம். இங்ங்ணம் அந்நூலை நன்றாய்ப் படித்து அனுபவித்த பெரும் புலவராய சேக்கிழார் அதனை வெறுத்தனர் என்றோ, அதற்கு மாறாக அரசனைத் தூண்டிப் பெரியபுராணம் செய்தார் என்றோ கோடல் பொருத்தமன்று. எனவே, சேக்கிழார்புராணக்கூற்று அதனைப் பாடிய ஆசிரியரது மனப்போக்கையும் சமணத்தில் வெறுப்பும் சைவத்தில் அளவு கடந்த பற்றும் கொண்ட மனப்பண்பையுமே உணர்த்துவதாகும் எனக் கோடலே பொருத்தமாகும். 2. இப்புராண ஆசிரியர் பெரிய புராணத்தை நன்றாகப் படித்தவராகத் தெரியவில்லை. நாயன்மாருள் முடிமன்னர் அறுவர் எனக் கூறி அவருள் இடங்கழியார் ஒருவர் எனவும், 'குறுநில மன்னர் ஐவர் எனக் கூறி, "அவருள் காடவர்கோன் கழற்சிங்கன், ஐயடிகள் காடவர்கோன் என்பவர் இருவர் எனவும் கூறியிருத்தல் பெருந் தவறு." என்னை? இடங்கழியார் கொடும்பாளுரை ஆண்ட சிற்றரசர்" என்றும் பின்னவர் இருவரும் பல்லவப் பேரரசர் என்றும் சேக்கிழார் தமது புராணத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்’ ஆதலின் என்க. சுந்தரர், தமது காலத்தவனான கழற்சிங்கனைத் தாம் பாடிய திருத் தொண்டத் தொகையில், கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் என்று தெளிவாகக் கூறியுள்ளார். இதனையேனும் இத்திருத்தொண்டர் L্যালয় ஆசிரியர் கவனித்தவராகத் தெரியவில்லை. 3. அறுபத்து மூன்று நாயன்மாருள், இயல், இசைத்தமிழ் வல்லோர்- அப்பர். சம்பந்தர். பேயார் இசைத்தமிழ் வல்லோர் - நந்தனார், ஆனாயர், பாணர் இயற்றமிழ் வல்லோர் - ஐயடிகள், திருமூலர், காரியார், சேரமான்பெருமாள் என்று வகுத்துக் கூறும் இந்த ஆசிரியர் சுந்தரரை இப்பிரிவுகளிற் சேர்த்துக் கூறத் தவறிவிட்டார். சுந்தரர், இயல், இசைத் தமிழ் வல்லோர் அல்லரா? நந்தனார் இசைத் தமிழில் வல்லார் என்பதற்குச் சான்று என்னை? 4. இங்ங்னமே, இந்த ஆசிரியர் பாடிய திருமுறை கண்ட புராணம்’ என்ற நூலிலும் சில தவறுகள் உண்டு. அவற்றுள் குறிக்கத்தக்க பெருந்தவறு ஒன்றுண்டு. அஃதாவது, இராசராசன் (கி.பி. 985 - 1014) காலத்துத் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, அவன் மகனான இராசேந்திரன் (கி.பி. 10121044) புதிதாக உண்டாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப்பெற்ற கங்கை கொண்ட சோழிச்சுரம் பற்றிக் கருவூர்த்தேவர் பாடிய திருவிசைப்பாவை