உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - பெரியபுராண ஆராய்ச்சி 4. இடங்கழி நாயனார் இவர் 'இருக்கு வேளுர்’ என்ற பதியினர் என்று நம்பி குறித்தார்."இருக்குவேளுர் என்பது வடவெள்ளாற்றின் தென் மருங்கில் பச்சைமலைப் பக்கத்தில் உள்ளதெனத் தெரிகிறது." ஆயின், சேக்கிழார் 'இடங்கழியார் பதி-கோனாட்டுக் கொடி நகரம் கொடும்பாளுர்" எனத் தெளிவாகக் கூறி நம்பி கூற்றை மறைமுகமாக மறுத்து விட்டார். கொடுப்பாளுரை ஆண்ட சிற்றரசர் நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்தில் சிறப்புடன் இருந்தவர் என்பது கல்வெட்டுகளாற் புலனாகும் செய்தி. சேக்கிழார் நம்பி கூறியதையும் மறுத்துக் கூறியுள்ளார் எனின், அவர் கொடும்பாளுருக்குச் சென்று இடங்கழி நாயனாரைப் பற்றி விசாரித்த பிறகே இம்முடிவுக்கு வந்தனர் என்று நினைத்தல் தவறாகாது - 5. கணம் புல்லர் முன்சொன்ன இடங்கழியார் இருக்குவேளுரினர்' என்றும் அவ்வாறே கணம் புல்லரும் இருக்குவேளுரினர் என்றும் நம்பி குறித்தார். ஆயின், சேக்கிழார் பின்னதைச் சரியென்று கொண்டு, முன்னதைக் கொடும்பாளுர் என மாற்றினதை நோக்க, இவ்விடங்களைப் பற்றிய சேக்கிழார் அறிவு தெற்றென விளங்குமன்றோ? இருக்குவேளுர் யாண்டையது என்பதற்குச் சேக்கிழார் கூறும் விடை காண்க;- - "இருக்குவேளுர் செல்வம் மலிந்த மாடங்கள் பெற்றது. பெருங்குடிமக்களை நெருக்கமாகக் கொண்டது. வட வெள்ளாற்றுத் தென்கரைப்பால் உள்ளது. பொழில்களை மிக்குடையது அப்பொழில்களில் விளையும் சுளைபொழி தேன் வயல்களிற் பாயும்'" சிதம்பரத்திற்கு வடக்கே ஒடும் ஆறு வெள்ளாறு என்று கூறப்படினும், சேக்கிழர் காலத்திலோநாயன்மார் காலத்திலோ அப்பெயர் பெற்றதில்லை அது நிவா எனப் பெயர் பெற்றிருந்தது. புதுக்கோட்டை நாட்டில் உள்ள குடுமியான் மலைக் கல்வெட்டுக்களால் அவ்வூர்க்கருகில் வெள்ளாறு என்ற பெயருடைய யாறு ஒன்று ஓடுகின்றது என்பது புலனாகின்றது." அதுவே, புதுக்கோட்டை நாட்டிற்கு மேற்கே மருங்காபுரிப் பக்கத்தில் உள்ள வேழமலையில் தோன்றி, அந் நாட்டின் வழியாகச் சென்று அறந்தாங்கி தாலூகாவில் உள்ள மணமேற்குடிக்கு வடபுறத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. அது பாண்டி நாட்டிற்கு வட எல்லையாக இருத்தல்பற்றி அதனை முற்காலத்தில் வட வெள்ளாறு என வழங்கியுள்ளனர்" அக்காரணம் பற்றியே சேக்கிழாரும் அதனை "வடவெள்ளாறு' என்று மேலே குறிப்பிட்டுனர் என்பது இங்கு அறியத்தக்கது.” வட வெள்ளாற்றின் தென்மருங்கில் பச்சைமலைப் பக்கத்தில் கணம்புல்லர் பிறந்த ஊராகிய இருக்குவேளூர் உள்ளதெனத் தெரிகிறது. இப்பதி வளமிக்க மலைச்சாரலில் இருப்பது என்பது புலப்படச் சேக்கிழார் கூறியிருத்தல் படித்தின்புறத்தக்கது." -