உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் 145 6. கலிக்காமர் . இவர் ஊரை நம்பி குறித்திலர்’ சுந்தரரும் குறிக்கவில்லை, ஆயின், சேக்கிழார் அதனைத் தெளிவாக விளக்கியுள்ளார். சோழ நாட்டின் பொன் கொழிக்கும் காவிரி வட கரைக் கீழ்பால் ஆடும் கொடிகளைக் கொண்ட உயர்ந்த மாடங்களையுடைய நகரம் திருப்பெரு மங்கலம் என்பது ஆதுவே கலிக்காமர் என்ற சோழர் சேனைத் தலைவர் வாழ்ந்த பதி. இவ்வூர் காவிரி வடகரைக்குக் கிழக்கே திருப்புன்கூருக்கு அண்மையில் உள்ளது.” 7. மானக்கஞ்சாறர் இவர் ஊர் இவர் பெயர் கொண்டு ஊகிக்கக்கூடிய அளவிலேயே சுந்தரரும் நம்பியும் குறித்தனர். ஆயின் சேக்கிழார் அஃது இன்னவூர் என்பதனை 6 செய்யுட்களால் விளக்கிப் போந்தார். அவ்வூர் ஆனந்த தாண்டவபுரம் என்பது அப்பகுதியின் கீழ்ப்பகுதியில் பஞ்சவடிசர் ஆலயம் ஒன்று இருக்கின்றது. அவ்வூர்க் கோவிலுள் வைத்துப் பூசிக்கப்படுகின்ற மாவிரதியார், மானக்கஞ்சாறர் படிமங்கள் மிகப் பழையவை. அவை 45 ஆண்டுகட்கு முன் நிலத்தினின்றும் எடுக்கப்பட்டவை. அவ்வூரின் மேல்புறம் 'வல்லத்து வழி எனப்படும் பகுதியில் உள்ள நிலங்கள் இப்போதும் கரும்புப் பயிர் மிகச் செழித்து விளைவன என்று பெயர் பெற்றவை. இது வயற்கரும்பின் கமழ்சாறுர் கஞ்சாறுர்’ என்ற சேக்கிழார் குறிப்பை விளக்கி நிற்கிறது என்னலாம். இதனை நோக்க கருப்பஞ்சாறுார்' என்பது கஞ்சாறுர் என மருவியதோ என்று நிளைக்க இடமுண்டு. அஃதாயின், இப்பகுதியின் பழைமை போற்றத்தக்க பழைமையாகும் என்பதில் ஐயமில்லை. 8. இயற்பகையார் இவர் பதி காவிரிப்பூம்பட்டினம். இந்நகரம் இன்றுள்ள பல்லவனீச்சுரம் என்ற கோவிலையும் தன் அகத்தே கொண்டிருந்தது என்பது, "பட்டினத்துறை பல்லவன் ஈச்சரம்" என்ற சம்பந்தர் தொடரால் அறியலாம்." பல்லவன் ஈச்சரத்திற்கு ஏறத்தாழ அரை மைல் மேற்கே "சாய்க்காடு" என்னும் சிற்றுர் உண்டு. அங்குள்ள கோவில் அப்பர், சம்பந்தர் பாடல்கள் பெற்றது. நகரத்திற்கும் இக்கோவிற்கும் இடையில் பழைய காலத்தில் காடு இருந்தது என்பது "சாய்க்காடு" என்ற பெயரானே அறியலாம். அக்காட்டிற்குள் இயற்பகையாரது மனைவியுடன் புகுந்த அடியாராகிய இறைவர். இயற்பகை முனிவா ஒலம்' என்று ஓலமிட்டது காட்டிற்கு வெளியே இருந்த இயற்பகையார்க்குக் கேட்டது. உடனே அவர் நாட்டிற்குட் புகுந்து தம் சுற்றத்தாரை எதிர்த்தார். அடியாராக வந்த இறைவர் சாய்க்காட்டுக் கோவிற்குள் ஒடிமறைந்தார் என்பது சேக்கிழார் கூற்று இன்று காவிரிப்பூம்பட்டினம் சென்று கடற்கரையிலோ-அன்றிக் காவிரி கடலோடு கலக்கும் இடத்திலோ நின்று