உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பெரியபுராண ஆராய்ச்சி 2. சுந்தரர் வெள்ளை யானைமீதும் சேரமான் பரிமீதும் சென்றதைச் சேக்கிழார் ஒப்புக்கொண்டார். ஆயின், அவ்விருவரும் கடல்வழிச் சென்றவர் என்ற படக்குறிப்பை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. என்னை? சேரர் தலைநகரிலிருந்து கடல் வழியே சென்றால் மேற்கே போகக்கூடுமேயன்றி, வடக்கே நிலப்பரப்பிலுள்ள இமயமலையை அடைமுடியாததாலும், நம்பி பாடலும் சுந்தரரது நொடித்தான் மலைப்பதிகமும் தெளிவாகக் "கயிலை புக்கனர்" என்பதை உணர்த்துதலாலும் என்க. நாயன்மார் கடல்வழிச் சென்றதாகத் தம் காலத்திலிருந்த வழக்கை" ஒட்டியே இராசராசன் காலத்து ஒவியர் வரைந்தனராதல் வேண்டும். அவ்வழக்கை நம்பியார் ஒப்பவில்லை என்பது அவர் பாக்கள் தெளிவுற உணர்த்தும். சுந்தரரும் சேரமானும் கயிலை சென்றதாக மூன்று இடங்களில் குறிக்கும் நம்பி அவர்கள் கடல்வழிச் சென்றனர் என்பதனையோ, விண்வழிச் சென்றனர் என்பதனையோ குறிக்காது விட்டமை கவனித்தற்கு உரியது. இவ்விரண்டும் கூறாதது அவரது (noncommittal policy) நன்கு உணர்த்துகிறதன்றோ? சேக்கிழார் நம்பியைப் போல வாளாவிடாது, ஓவியக் குறிப்பையும் ஒப்புக்கொள்ளாமல் விண்வழிச் சென்றார் என்று ஒரு முடிவாகக் கூறியதற்கு நொடித்தான்மலைப் பதிகமே காரணம் என்னலாம். செங்குட்டுவன் இமயமலையடிவாரம் போகும்பொழுது அவன் படைகள் சென்ற வழியில் கடல் அலைகள் படைகளின் பாதங்களை அலம்பின என்பது சிலப்பதிகாரக் கூற்று" 3. கந்தருவர் இசை முழக்கமும் மலர்மாரி பெய்தலும் குறிக்கும் ஒவியத்தைச் சேக்கிழார் அப்படியே தழுவிக் கொண்டனர்." சேக்கிழாரும் சிற்பமும் சேக்கிழார் காலத்துச் சிற்பங்களில் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. கங்கைகொண்ட சோழபுரத்துச் சிவன் கோவிலில் உள்ள சண்டீசர் "சண்டிசப் பதம்" பெற்றதைக் குறிக்கும் சிற்பமாகும். இறைவன் உமையம்மையோடு அமர்ந்து, தமது மடித்துன்றிய வலக்கால் அடியில் சண்டீசரை அமர வைத்து. தாம் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து அவர் முடிமீது சூட்டிச் சண்டீசப் பதம் அருளும் இச்சிற்பம் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பனவாகும். இதற்கு வலப்புறம் கணநாதர் ஆடிப்பாடிக் களித்தலும், இடப்புறம் பசுக்கள் நிற்றலும் பசுக்கள்-வேதங்களைச் சுட்டுவன?) காட்டப் பட்டுள்ளன. இச்சிற்பம் சேக்கிழார்க்கு முற்பட்டதென்பது 6-ஆம் பிரிவில் விளக்கப்பட்டது. சேக்கிழார் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரமே சோழப் பெருநாட்டின் தலைநகரமாக இருந்தது. ஆதலின், சேக்கிழார் நாள்தோறும் இக்கோவிலைத் தரிசித்தார் எனக் கொள்ளலாம். அங்கிருந்த இச்சிற்பம் அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதனால் அவர் இச்சிற்பத்து அமைப்பை இரண்டு பாக்களால் சித்திரித்துவிட்டார்." இச்சிற்பத்தையும் சேக்கிழார் பாக்களையும் கண்டோர் இவ்வுண்மையை நன்குணர்வர்.