உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் - 149 சேக்கிழாரும் நாயன்மார் உருவச் சிலையும் : அமர்நீதி நாயனாரும் அவர் மனைவியாரும் கோவணத் துணிக்கு ஈடாகத் துலைபுக்கனர் என்று நம்பி குறித்தார்." ஆயின், சேக்கிழார் அவ்விருவருடன் அவர் தம் மைந்தனும் துலைபுக்கனன் என்று மாற்றிஅமைத்தார், இங்ங்னம் சேக்கிழார் மாற்றிக்கூறக் காரணம் என்ன? பழையாறை வடதளியில் அமர்நீதியார் சிலையும் அவர் மனைவியார் கைகளில் மகன் இருத்தலைக்காட்டும் சிலையும் இன்றும் காணத்தக்கனவாக உள்ளன. இச்சிலைகள் சேக்கிழார்க்கு முற்பட்டனவாகிச் சேக்கிழார் கருத்தை ஈர்த்தனவாகலாம். சேக்கிழாரது புதிய சேர்க்கைக்கு (மகனைச் சேர்த்தமைக்கு இவ்வம்மையார் சிலை ஒன்று தவிர வேறு காரணம் கூறக்கூடவில்லை. இந்நுட்பமான குறிப்பால் சேக்கிழாரது நுணுகிய ஆராய்ச்சித் திறன் நன்கு விளங்கும். இதுகாறும் கூறப்பெற்ற பற்பல சான்றுகளால், சேக்கிழார் தமிழகத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்த பேரறிஞர் என்பதும், நாயன்மார் வாழ்ந்த பதிகள், பாடல் பெற்ற கோவில்கள். அக்கோவில்களில் இருந்த நாயன்மார் திருவுருவங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் முதலியவற்றை இயன்றவரை (பெரும்பாலும் நேரிற் கண்டவர் என்பதும் தெளிவாக விளக்கமுறும் செய்திகளாம். ஐந்தாம் கார்ணம் பெரிய புராணத்துள் கூறப்படும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மாரைப்பற்றிய குறிப்புகளைச் சேக்கிழார் அரும்பாடுபட்டுத் தொகுத்துக் கூறினமை மேற்சொன்ன மூவகை வேறுபாடுகட்கும் சிறந்ததொரு காரணமாகும். இதனை விளக்கமாக அடுத்த பிரிவில் காண்போம்.